எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களைக் கையாளவும் பெற்றோர்களுக்குப் பயன் படக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடாக வந்துள்ளது இந்த நூல்.
எளிமையும் ஆழமும்
குழந்தை வளர்ப்பில் எழக்கூடிய பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், நோய்கள், அவற்றுக்கான தடுப்பு முறைகள், முதலுதவிகள், அந்த வயதுக்குரிய குழந்தைகளின் கல்வி, உளவியல், கற்றல் முறைகள் எனப் பல்வேறுபட்ட விஷயங்கள் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளின் உடல்,மனம், சமூகப் பண்பு, கற்றல் திறன்கள், ஆளுமை என அனைத்திலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த உதவும் வகையில் இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. முரண்டுபிடித்தல், தாக்கும் குணம் உள்ளிட்ட நடத்தைகளுக்கான காரணங்களையும் விவாதித்துள்ளார்.
குழந்தைகளுக்கு எப்படி நேரத்தை ஒதுக்குவது?
இந்தப் போட்டி நிறைந்த உலகில் நல்ல ஆளுமையுள்ளவர்களாகக் குழந்தைகளை வளர்ப்பதற்கான வழிமுறைகளும் விவாதிக்கப் பட்டுள்ளன. இந்த நூலில் சொல்லப்பட்டு இருப்பவற்றை தங்களின் குடும்பத்தில் பயன்படுத்திப் பார்ப்பதற்கு பெற்றோர்கள் தங்களின் நேரத்தை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கும் வழிகாட்டுகிறார் ஆசிரியர்.
மொத்தத்தில் தங்களின் குழந்தைகளை எல்லா வகைகளிலும் மேம்பட்டவர்களாக வளர்க்க விரும்பும் பெற்றோருக்குப் பயன் படக்கூடிய தகவல் களஞ்சியமாக இந்த நூல் உள்ளது.
-த.நீதிராஜன்
பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே
ஆசிரியர் : டாக்டர் வி. நடராஜன்
விலை : ரூ.200
வெளியீடு : சாந்தா பப்ளிஷர்ஸ்
சென்னை- 600 014.
தொடர்புக்கு : 044-28115618
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago