அணு (ஆட்டம்-atom) - ஒரு தனிமத்தின் அடிப்படையானதும், தனிமத்தின் தனித்தன்மையைக் கொண்டதுமான நுண்ணிய கூறு.
நேர்மின்னணு (புரோட்டான்-proton) - அணுக்கருவில் இருக்கும், நேர்மின்சுமை கொண்ட அணுத்துகள்.
எதிர்மின்னணு (எலெக்ட்ரான்-electron) - அணுக்கருவுக்கு வெளியே காணப்படும், எதிர் மின்சுமை கொண்ட அணுத்துகள்.
சமன்அணு (நியூட்ரான்-neutron) - அணுக்கருவில் காணப்படும், மின்சுமையற்ற அணுத்துகள்.
அணுக்கரு ( நியூக்ளியஸ்-neuclius) - அணுவின் மையப் பகுதி. நேர் மின்னணுக்களையும் சமன்மின்னணுக்களையும் உள்ளடக்கியது. நேர் மின்சுமை கொண்டது.
ஈர்ப்பணு (கிரேவிட்டான்-graviton) - ஈர்ப்புவிசைக்குக் காரணமானது என்று நம்பப்படும் அணுத்துகள். இந்த அணுத்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒளியணு (ஃபோட்டான்-photon) - ஒளியைக் கொண்டுசெல்லும்
அணுத்துகள். நிறையற்றது.
பசையணு (குளுவான்-gluon) – அணுக்கருவுக்குள் குவார்க்குகளைப் பிணைத்து வைத்திருப்பதாக நம்பப்படும், நிறையற்ற அணுத்துகள்.
அணு வல்விசை (நியூக்ளியர் ஸ்ட்ராங் ஃபோர்ஸ்-nuclear strong force) - அடிப்படை விசைகளிலேயே மிகவும் வலுவான விசை. அணுக்கருவைப் பிணைத்துவைத்திருக்கும் விசை.
அணு மென்விசை (நியூக்ளியர் வீக் ஃபோர்ஸ்-nuclear weak force)- கதிரியக்கத்துக்குக் காரணமான விசை.
மின்காந்த விசை (எலெக்ட்ரோமேக்னடிக் ஃபோர்ஸ்-electromagnetic force) - மின்சுமை கொண்ட அணுத்துகள்களுக்கிடையே காணப்படும் விசை. நேர்மின்சுமையையும் எதிர்மின்சுமையையும் பிணைக்கும் விசை.
அணுத்துகள் (பார்ட்டிக்கிள்-particle)- அணுவைவிட நுண்மையான துகள்களான நேர்மின்னணு, எதிர்மின்னணு, சமன்மின்னணு, குவார்க்குகள் போன்றவற்றைக் குறிக்கும் சொல்.
அணு எண் (அடாமிக் நம்பர்-atomic number) - அணுக்கருவில் உள்ள நேர்மின்னணுக்களின் எண்ணிக்கை. ஒரு தனிமத்தையும் இன்னொரு தனிமத்தையும் அணு எண்ணைக்கொண்டு பிரித்தறியலாம். ஹைட்ரஜனின் அணு எண்-1, ஆக்ஸிஜனின் அணு எண்-8
நிறை எண் (மாஸ் நம்பர்-mass number)- அணுக்கருவில் உள்ள நேர்மின்னணு, சமன்மின்னணு ஆகிய இரண்டு வகை அணுத்துகள்களின் கூட்டுத்தொகை.
துகள் முடுக்கி (பார்ட்டிக்கிள் ஆக்ஸிலரேட்டர்-particle accelarator)- அணுத்துகள் இயற்பியலில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக, எதிரெதிர் மின்சுமை கொண்ட அணுத்துகள்களை அதிவேகத்தில் வட்டப்பாதையில் சுற்றவிட்டு மோதவிடுவதற்கான, உயர் மின்னாற்றல் தேவைப்படும் சாதனம்.
துகள் தாக்குவிப்பான் (பார்ட்டிக்கிள் கொலைடர்-particle collider)- துகள் முடுக்கியில் ஒரு வகை. துகள்களை ஒன்றுக்கொன்று, ஒளியின் வேகத்துக்கு அருகில் சுற்றச் செய்து மோத விடும் சாதனம்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago