கடவுளின் நாக்கு 34: சிறுகல் போதும்!

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

ஜப்பானிய சாமுராய்களுக்கு சொல் லப்படும் கதைகளில் ஒன்று பொறுமையின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது. ஒரு சாமுராய் வீரனின் வீட்டில் எலித் தொல்லை அதிகமிருந்தது. குறிப்பாக, ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது. வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை. அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்.

இரண்டு பூனைகளும் முரட்டு எலி யைத் துரத்தின. ஆனால், எலி ஆவே சத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனை களையும் காயப்படுத்தியது. முடிவில் சாமுராய் தானே எலியைக் கொல்வது என முடிவுசெய்து, ஒரு தடியை எடுத்துக்கொண்டுபோய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது. முடிவில் குளியலறைப் பொந் துக்குள் ஒளிந்துகொண்டபோது அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான். வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீது பாய்ந்து தாக்கியது. அதில் அவனும் காயம் அடைந்தான். ‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லை; நாமெல்லாம் ஒரு சாமு ராயா?’ என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர், ‘‘அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது. அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்!’’ என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறுவழியில்லாமல் அந்தக் கிழட்டு பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான். பூனையும் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டது. அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது. பூனை இருப்பதை அறிந்த எலி, தயங்கித் தயங்கி வெளியே வந்தது. கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை. எலி தைரியமாக அங்கு மிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டி களைத் திருடித் தின்பதுமாகயிருந்தது.

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன. ஆனால், இந்தக் கிழட்டு பூனையோ இருந்த இடத்தைவிட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள் வழக்கம்போல எலி வளையைவிட்டு வெளியே வந்தது. சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

திடீரென பாய்ந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்றுபோட்டது. சாமுராய் அதை எதிர்பார்க்கவேயில்லை. இவ் வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்துகொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி ‘‘எப்படி முரட்டு எலியைக் கொன்றாய்? இதில் என்ன சூட்சுமம்?’’ எனக் கேட்டன.

‘‘ஒரு சூட்சுமமும் இல்லை. பொறுமை யாக காத்திருந்தேன். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது. ஆகவே, அது தன்னை தற்காத்துக்கொள்ள பழகியிருந்தது. நான் நிதானமாக, பொறுமையாக காத்துக்கிடந்தபோது அது என்னை செயலற்றவன் என நினைத்துக்கொண்டது.

ஆயுதத்தைவிட பல மடங்கு வலிமை யானது நிதானம். எதிரி நாம் செய்யப்போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம். வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டுதான் இருப்பான்!’’ என்றது கிழட்டு பூனை. அப்போது மற்றோரு பூனை கேட்டது: ‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன். என் நகங்கள் கூர்மையானவை. ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ள பழகியிருக் கிறது. எல்லா எலிகளும் பூனைகளுக்கு பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும். ஆகவே ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்ற வுடனே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய். ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள், அவசரக்காரர் கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள். பலவான் தனது பேச்சிலும், செயலிலும் அமைதியாகவே இருப்பான். உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும். ஆனால் தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’ என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே. மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டு பூனையிடம் கிடையாது. ஆனால், அது தன் பலத்தை மட்டும் நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டது. வாய்ச் சவடால் விடுவதைவிட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது. காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வீட்டில், அலுவலகத்தில், பொது வெளியில் நாம் எதற்கும் அவசரம் காட்டு கிறோம். கோபத்தில் கத்தி கூப்பாடு போடுகிறோம். நம்மைவிட வலிமையான வர்கள் நம் முன்னே இருக்கிறார்கள் என அறியாமல் சவால்விடுகிறோம்.

அறிவை துணையாகக் கொண்டவர் கள் அளந்து பேசுவார்கள். எதையும் செய்வதற்கு முன்பு நிதானமாக அணுகு வார்கள். கோபத்தால் ஒரு பயனும் இல்லை. வீண்விரோதமே எழும் என அறிந்திருப்பார்கள். ஆயிரம் வார்த்தை களைக் கொட்டி இறைப்பதை விடவும் மவுனமாக நடந்து ஜெயித்துவிடமுடியும் என உணர்ந்திருப்பார்கள்.

போர்க் கலைப் பயிலும் சாமுராய் களுக்கு உடல் மட்டுமில்லை; மனமும் பயிற்றுவிக்கப்பட வேண்டியது என கற்றுத் தருகிறார்கள். மனதின் உறுதிக் கும் வடிவமிருக்கிறது. அதை கையா ளத் தெரியும்போதுதான் ஒருவன் முழுவீரனாகிறான் என்றே அறிவுறுத்து கிறார்கள்.

கிராமப்புறங்களில் பார்த்திருக் கிறேன். அற்பர்கள்தான் தெருச் சண்டை யிடுவார்கள். பத்து பேரை அடித்துப் போடும் வலிமைகொண்டவன் கைகட்டி அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருப்பான்.

பைபிள் கதையில் வரும் கோலி யாத்தை தாவீது வென்றது வெறும் கவண் கல்லை வீசிதான். தற்பெருமை கொண்டவனை வீழ்த்துவதற்கு சிறுகல் போதும் என்பதன் அடையாளம் அது.

வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங் களில் இல்லை. மனத் தெளிவும், நிதான மும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதே ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட இந்த ஜப்பான் கதை நம் காலத்துக்கும் பொருத்தமான வழிகாட்டுதலே ஆகும்.

இணைய வாசல்: >ஜப்பானிய மரபுக் கதைகளை வாசிக்க

- கதை பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்