1905-ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்படுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார்.
‘க்ரவுட்ஸ் அண்ட் பவர்’ என்ற இவரது புகழ்பெற்ற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறு கட்டுரைகள் கொண்ட தொகுதியாக ‘அதிகாரத்தின் மூலக்கூறுகள்’ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும் போது அத்தனை பலவீனமாக இருக்கும் மனிதர்கள், கூட்டமாகச் சேரும் போது எப்படி அதிகாரத்தைச் செயல்படுத்துகிறார்கள் என்பதைக் கவித்துவமான உருவகங்களைக் கொண்டு எழுதப்பட்டிருக் கும் கட்டுரைகள் இவை.
அதே கும்பல்தான் ஆட்சியாளர்களின் கைப் பொம்மையாகவும் எளிதில் மாறும் என்கிறார் எலியா கனெட்டி. இந்திய, தமிழக அரசியல் சூழலில் மக்கள் நலனுக்கு எதிராகக்கூட கும்பல் அரசியல் இயங்க முடியும் என்பதற்கு பல சான்றுகளைத் தொடர்ந்து காட்ட முடியும். அந்தப் பின்னணியில் இப் புத்தகம் நம் சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிகாரத்தின் மூலக்கூறுகள்
எலியா கனெட்டி, தமிழில்: ரவிக்குமார்
வெளியீடு: மணற்கேணி, புதிய எண் 10, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-05 தொடர்புக்கு: 9443033305, விலை: ரூ.25/-
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago