இசை, பரதநாட்டியம், மோகினியாட்டம், நாடகம் போன்ற பல்வேறு கலை வடிவங்களிலும் புதிய முயற்சிகளை ஏற்படுத்திவரும் இளைஞர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மேடை அமைத்துத் தரும் அமைப்பு ஸ்வானுபவா. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் ஸ்வானுபவாவின் கலை நிகழ்ச்சிகள் இந்தாண்டு ஆகஸ்ட் 22 முதல் 24 வரை கலாக்ஷேத்ரா மையத்தில் நடக்கவிருக்கிறது.
கர்னாடக மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி, பிரபல கர்னாடக இசைப் பாடகர் சுகுணா வரதாச்சாரி, கலாக்ஷேத்ராவின் இயக்குநரும் பிரபல பரதநாட்டியக் கலைஞருமான பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கிவைக்கின்றனர். தொடர்ந்து டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினியாட்டமும், சுகுணா வரதாச்சாரியின் இசை நிகழ்ச்சியும், கலாக்ஷேத்ரா மாணவர்களின் நிகழ்ச்சியும், ஃபிரண்ட்ஸ் கலைக் குழுவினரின் பறையாட்டமும் முதல் நாளில் நடக்கவிருக்கின்றன.
நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் கலாக்ஷேத்ராவின் தலைவர் என். கோபாலசுவாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கௌரி ராம்நாராயண் அவர்களின் இசை நாடகம், மீனாட்சி சீனிவாசனின் பரத நாட்டியம், உடையாளூர் கல்யாணராமனின் நாம சங்கீர்த் தனம், மாம்பலம் எம்.கே.எஸ். சிவா குழுவினரின் நாகஸ்வர இசை ஆகியவை நடைபெறும்.
‘யாதும்’ என்னும் ஆவணப்படத் திரையிடலும், நாகூர் மூவரின் சூஃபி இசைப் பாடல்கள் நிகழ்ச்சியும் நடக்கவிருக்கின்றன. இதைத் தொடர்ந்து தாளவாத்திய நிகழ்ச்சியும் நடக்கும். மேற்சொன்ன எல்லா நிகழ்ச்சிகளும் காலை முதல் நண்பகல் 2 மணி வரை நடக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கின்றன.
நிகழ்ச்சியின் மூன்றாம் நாளில் அருண் கஷால்கரின் ஹிந்துஸ்தானி இசை, பிரளயனின் சென்னை கலைக் குழுவின் ‘பயணம்’ நாடகம், தமிழ் முஸ்லிம்களின் வரலாற்றைச் சொல்லும்
இறுதி நாளின் மாலை 4 மணிக்குக் கர்னாடக இசை குறித்த பயிலரங்கை விஜய் சிவாவும், பரதநாட்டியம் குறித்த பயிலரங்கை நாட்டியக் கலைஞர் பிரஹா பெஸலும் நடத்துகின்றனர். இந்தப் பயிலரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
மாலை 7 மணிக்கு ரவிகிரணின் சித்ரவீணா இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. Does Art Unlock the doors to Learning? கல்வியில் கலை மற்றும் கற்பனையின் பங்கு என்னும் தலைப்பில் பயிற்சிப் பட்டறையை வித்யா வனம் (ஆனைகட்டி) பள்ளியின் ஆசிரியரும் பிரேமா ரங்காசாரியும் நடத்தவிருக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago