வித்தியாசமான நாடக அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவதையே லட்சிய மாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமைப்பு ஷ்ரத்தா. சமூகம், புராணம், அறிவியல் என பலவற்றை மையப்படுத்தி பல வெற்றிகரமான நாடகங்களை அரங்கேற்றியுள்ளது இந்த அமைப்பு.
கிரிக்கெட்டில் நடைபெறும் ஊழல் முதல் மாணிக்கவாசகர், ஸ்ரீராமானுஜர் போன்ற அவதாரப் புருஷர்களின் வாழ்க்கைச் சித் திரம் வரை, `ஷ்ரத்தா’ அமைப்பினரின் நாடகங்களுக்கு கருப்பொருளாகி இருக் கின்றன.
8-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் இந்தக் குழுவினரின் 30-வது நாடகம் `தேவலீலா’, நாளை தொடங்கி ஞாயிறு வரை சென்னை, ஆழ்வார்பேட்டை, நாரதகான சபாவில் அரங் கேறவிருக்கிறது.
புராணங்களில் இருந்தும் 11-ம் நூற்றாண் டில் வாழ்ந்த சைவத் துறவி சோமதேவா எழுதிய கதாசரிதசாகராவில் இருக்கும் கதைகளையும் தழுவி மூலக்கதையை எழுதியவர் யோ.ராமச்சந்திரன். இதற்கு நாடக வடிவம் கொடுத்திருப்பவர் ஜி.சுவாமி நாதன். இந்நாடகத்தை இயக்குபவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி.
“அந்தக் கதைகளின் பாத்திரங்கள் தற் போதைய சமூகத்தில் நிலவும் பாத்திரங் களோடு பலவிதங்களிலும் ஒருசேர இருந் தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது” என்கிறார் ஜி.கிருஷ்ணமூர்த்தி.
இந்த நாடகத்தில் இடம்பெறும் கதை யாடல்கள் பெரும்பாலும் கூத்து அசைவுகளை அடியொட்டி இருக்கும் என்பதால், இந்தப் படைப்பில் ஈடுபட்டிருக்கும் நடிகர்களுக்கு சாரதி கிருஷ்ணன் கூத்துபித்தன் பயிற்சி அளித்திருக்கிறார். நாடகத்துக்கான இசையை விஸ்வபாரத் அமைத்திருக்கிறார். நாடகத் துக்கான அரங்க அமைப்பை வித்தியாசமாக அமைக்கவிருக்கிறார் கலை இயக்குநர் ஜி.ரமேஷ்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago