திரைப்பட இயக்குநர் லிங்குசாமி யின் கவிதைகளை முன்வைத்து கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூல்வெளியீட்டு விழா மதுரை அவனியாபுரத்தில் உள்ள கேஃபோர் ஓட்டலில் நடைபெற்றது. விழாவுக்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமை வகித்தார். சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் மு.வேடியப்பன் வரவேற்றார். மதுரை காவியன் குழும நிறுவனங்கள் நிர்வாக இயக்குநர் சின்னமருது தீனதயாளபாண்டியன் தொடக்க உரையாற்றினார்.
இதில் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலை உயிர்மை இதழ் ஆசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வெளியிட, எழுத்தாளர் சு.வெங்க டேசன் எம்.பி. பெற்றுக் கொண்டார்.
விழாவில் கவிஞர் அறிவுமதி வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:ஹைக்கூ கவிதைசங்க இலக்கியத்தில் உள்ள இலக்கிய மற்றும் இயற்கை அழகையும், வரலாற்று உணர்வை யும் படிக்கவில்லை என்றால் நீங்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கு தகுதியற்றவர்கள். இயற்கையாக அமைவதுதான் ஹைக்கூகவிதை. கவிதையை செயற்கையாக எழுதி பாராட்டு வாங்க முடியாது. செய்த கவிதைகள் நான்கு நாளில் செத்துப்போகும். ஆனால் இயற்கையாக எழுதும் கவிதைகள் காலத்தை கடந்து நிற்கும். அப்படி இயற்கையாக கவிதை எழுதுவோரில் லிங்குசாமி முதன்மையில் இருக்கிறார்.
ஹைக்கூவை தமிழில் முதன் முதலில் எழுதி பதிவு செய்தவன் மகாகவி பாரதி. அடுத்ததாக தியாகராசர் கல்லூரியில் கவிக்கோஅப்துல்ரகுமான், கவிஞர் மீராவோடு சேர்ந்து படித்த லீலாவதி என்பவர் ஜப்பான், ஆங்கில மொழிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை மொழி பெயர்த்து கவிக்கோவிடம் கொடுத்து அணிந்துரை கேட்டார். அந்த வெளிச்சத்தில்தான் ஹைக்கூ பல்வேறு வகையில் பரிணமித்தது.
ஜென் தத்துவத்தில் இருந்துதான் ஹைக்கூ வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழின் சங்கஇலக்கிய மரபுகளிலேயே இதற்கான வேர்கள் இருக்கின்றன. உலகத்தில் எத்தனையோ மொழி களில் ஹைக்கூ எழுதுகிற கவிஞர் கள் இருக்கிறார்கள். ஆனால் ஜப்பானுக்கு அடுத்து தமிழில் ஹைக்கூ கவிதை எழுதுவதில் மிகச் சிறந்தவர்கள் தமிழர்கள்தான். சங்க இலக்கியத்தின் வேர்களிலே ஜென் தத்துவத்தின் அத்தனை ஆழங்களும் இருக்கின்றன என்றார்.
திரைப்பட இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது: என் மீது உள்ள அன்பினால் ஜெயபாஸ்கரன் நூல்எழுத வேண்டும் எனச் சொன்னபோது சரி என்று சொல்லிவிட்டேன். அவர் எழுதிய கட்டுரையில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்த்து குடியரசுத் தலைவரின் விருது பெற்ற திம்மக்காவைப் பற்றி படித்தபோது கண்ணீர் வடித்தேன். குழந்தை இல்லை எனத் தற்கொலைக்கு முயன்ற திம்மக்காவை அவரது கணவர் காப்பாற்றி மரக்கன்றுகளை நடச்செய்து ஊக்கப்படுத்தினார்.
அதுபோல், கவிக்கோ அப்துல் ரகுமான் என்னிடம் கவிதையை எழுதிவிட்டு அமைதியாய் இரு என்றார். நல்ல நண்பர்களை சந்திக்கும்போது கவிதை பேசிக் கொள்வோம். கவிதையைப் புரிந்துகொள்ளும் அறிவு வேண்டும். அந்த ஒருமித்த எண்ணங்கள் கொண்ட நண்பர்களோடு வாழ்வதேவாழ்க்கை என்றார்.
இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், பிருந்தாசாரதி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கவிஞர் ஜெயபாஸ்கரன் ஏற்புரை ஆற்றினார்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
24 days ago
இலக்கியம்
24 days ago