நாடக உலா: ‘ஹோம் மேக்கர்’

By யுகன்

நவீனத்தையும் மரபார்ந்த நமது கலாச் சார பெருமைகளையும் தனது நாட கத் தயாரிப்புகள் மூலமாக நாடகமாக் கும் ஷ்ரத்தாவின் 32-வது நாடகம் `ஹோம் மேக்கர்’. தியாகப்பிரம்ம கான சபா ஆதர வுடன் சென்னை வாணி மகாலில் கடந்த 27-ம் தேதி அரங்கேறிய இந்த நாடகத்தை ஆனந்த் ராகவ் எழுத, டி.டி.சுந்தரராஜன் இயக்கியிருந்தார்.

பட்டதாரியான சுமதி, அருண்குமா ருக்கு மனைவியானவுடன் வீட்டின் சகல பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு இல்லத்தரசி ஆகிறார். இரு குழந்தை கள், அவர்களின் படிப்பு, கணவனுக்கு வேண்டியதை நேரத்துக்கு செய்து கொடுப்பது, உடல்நிலை சரியில்லாத மாமியாரை கவனிப்பது, அவரது மறை வுக்குப் பின்பு தனது தந்தைக்கு உதவு வது, அவரது மறைவுக்குப் பின், உடல் நலம் குன்றிய மாமனாருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது என்று அடுத்த டுத்து பணிகள்.

எல்லாவற்றையும் எந்த அலுப்பும் இல் லாமல் செய்யும் சுமதியை அவரது மகனும், மகளும் பெரிய நிறுவனத்தில் பதவியில் இருக்கும் பெண்களோடு (தனது நண்பர்களின் அம்மாக்கள்) ஒப்பிட்டு மட்டம்தட்டிப் பேசுகின்றனர். ``உன் கேரியரையே கெடுத்துக்கிட்டே..’’ என்று கணவனும் குற்றம் சுமத்துகிறார்.

இதனால் வெறுத்துப்போகும் சுமதி, ‘‘இனி இந்தக் குடும்பத்தில் என் சேவையைப் பெறுவதற்கு சம்பளம் கொடுக்க வேண்டும்’’ என்கிறார். ஹோம் மேக்கருக்கான அந்த ஒப்பந் தத்தில் கணவன் கையொப்பமிட்டுக் கொடுப்பதை ஒளிப்படம் எடுத்து முக நூலில் பகிர, நாடெங்கும் பெண்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைக்கிறது.

அந்தத் திட்டத்தை மாமனாரின் ஆதரவோடு ஹோம் மேக்கர் நிறுவனமாக மாற்றி உச்சத்துக்குப் போகிறார் சுமதி. அதன் பிறகு, அவரது குடும்பத்தில் என்னெல்லாம் நடக்கிறது என்பதுதான் `ஹோம் மேக்கர்’ நாடகத்தின் கதை.

வீட்டில் எத்தனையோ வேலைகளை செய்யும் மனைவியை, ‘வீட்டில் சும்மா தான் இருக்கிறார்’ என்று கூசாமல் மற்றவர் களிடம் அறிமுகப்படுத்தும் ஆண்களுக்கு இந்த நாடகம் ஒரு சாட்டையடி.

சுமதியாக நடித்த சுசித்ரா ரவியும் சுமதி யின் மாமனாராக நடித்த குருகுலம் ரமேஷும் ஒட்டுமொத்த நாடகத்தையும் தங்கள் சீரான நடிப்பால் தாங்குகின்றனர்.

சுமதியிடம் இருந்து கணவரும் குழந் தைகளும் எதிர்பார்ப்பது பொருளாதார வசதிகளா? சமூக அந்தஸ்தா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. பொருளாதார வசதியைத்தான் என்றால், அதற்கான பதில், 3-வது காட்சியிலேயே வந்துவிடு கிறது. (கணவரின் டெபிட் கார்டை வைத்துக்கொண்டு குடும்பத்தை நிர்வகிப்பது சுமதிதான்.)

ஒருகட்டத்தில், ‘எங்களுக்கு பரபரப் பாக பணிபுரியும் அம்மா வேண்டாம். வீட்டுக்குள் எங்களுக்கான அம்மாவாக இருந்தால் போதும்’ என்று குழந்தைகள் சொல்லும்போது, சுமதி சொல்லும் பதிலில் அந்தப் பாத்திரத்துக்கான நோக்கத்தை காப்பாற்றுகிறார் இயக்குநர் சுந்தரராஜன்.

ஹோம்மேக்கர் என்பதற்கான அர்த் தத்தை, இரு குடிகாரர்கள் விவாதிக்கும் காட்சியில் வெளிப்படும் அரசியல் பக டியை தவிர்த்துவிட்டு, பெரும்பாலான குடிகாரர்களின் தள்ளாடும் குடும்பத்தை யும் சுமதியின் ஹோம்மேக்கர் நிறுவ னம் மூலம் பயன்பெறும் குடும்பத் தலைவி கள்தான் காப்பாற்றுகின்றனர் என்று நேர் மறையாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ஆணின் பொதுப் புத்தி யான `தான்தான் குடும்பத்தின் பிரெட் வின்னராக இருக்க வேண்டும்’ என்னும் சித்தாந்தத்தை நாடகம் தவிடுபொடி யாக்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

மேலும்