மகாபாரதம், ராமாயணம் போன்ற காப்பியங்களில் இருந்து மட்டுமே பெரும்பாலும் தெருக்கூத்துகள் நடத்தப்படும். இலக்கியம், வரலாற்றின் வழியாகவும்கூட தெருக்கூத்தை நடத்த முடியும் என்பதை ‘நந்திவர்மன் கூத்து’ வாயிலாக நிரூபித்துக் காட்டியுள்ளார் சங்ககிரி ராஜ்குமார். கூத்து வடிவிலான நாடகத்தை இயக்கியதோடு, நந்திவர்மன் பாத்திரத்திலும் வாழ்ந்து காட்டினார்.
கலைகளின் கருவறையாக இன்றைக் கும் திகழும் கிராமங்களில் மட்டுமே கூத்துக் கலை உயிர்ப்புடன் விளங்குகிறது. அத்த கைய கூத்துக் கலையை பெருநகர சென் னையின் குளிரூட்டப்பட்ட சர் பிட்டி தியாக ராயர் அரங்குக்கு கொண்டுவந்ததற்கே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரை பாராட்ட வேண்டும். இந்த தெருக்கூத்து கடந்த ஞாயிறன்று நடந்தது.
தமிழின் தொன்மையான இலக்கிய வகைகளில் ஒன்று கலம்பகம். நந்திக்கலம் பகம் என்பது பல்லவ மன்னன் நந்திவர்ம னைப் பற்றியது. இதை எழுதியவர் பற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. நூற்றுக் கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட இந்த தொகுப்பில் இருந்து சில பாடல் களை பாத்திரங்களே பாடி நடித்தது, தாய்க் கலையான கூத்துக் கலையின் பெருமையை நகரத்தில் இருப்பவர் களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
பல்லவ மன்னன் நந்திவர்மன் பகைவர் கள் பலரை வெற்றிகொள்கிறான். ஆனால், அவனது தம்பி சந்திரவர்மனோ பகை நாட்டு அரசர்களுடன் சேர்ந்து, நந்திவர்மனை அழித்து அரசனாக திட்டம் போடுகிறான். அவனது சூழ்ச்சியை தெரிந்துகொண்ட நந்திவர்மன் மனைவி சங்காதேவியும், மகன் நிருபதுங்கனும் சந்திரவர்மனை சிறையில் அடைக்கின்றனர். சிறையில் இருந்து தப்பிக்கும் சந்திரவர்மன், அண் ணனை சூழ்ச்சியாக, தமிழால் புகழ்ந்து பாடியே கொல்வதற்கு திட்டம் போடுகி றான். தமிழின் அருமைக்காக வேண்டி உயிர் துறக்கவும் சம்மதிக்கிறான் நந்திவர்மன்.
அந்த தத்ரூபமான காட்சியில் குளிர்ந்த அறையிலும் தமிழ் வெப்பம் பரவி யதை உணரமுடிந்தது. அதன்பின், சந்திர வர்மனின் அரியணை கனவு நிறைவேறி யதா என்பதை பரபரப்பான பாத்திரங் களின் உணர்ச்சிபூர்வமான நடிப்பு மூலம் காட்சிப்படுத்தினர்.
சந்திரவர்மனாக நடித்த சபரி ராஜன், நிருபதுங்கனாக நடித்த கோபி, சங்காதேவி யாக நடித்த சக்தி பாபு, கதைசொல்லியாக நடித்த செந்தில்குமார் ஆகியோரது வசன உச்சரிப்பும், உடல்மொழியும் கூத்தின் சம்பவங்களோடு நம்மை ஒன்றவைத்தன.
‘‘சாளுக்கிய மன்னன் அவனுக்குப் பணிந்து ஜிஎஸ்டியோடு சேர்த்து கப்பம் கட்ட லிகிதம் அனுப்பியிருக்கிறான் மன்னா’’ - என்பது போன்ற வசனங்களில் நிகழ்கால அரசியல் விமர்சன தெறிப்பு களுக்கு பலத்த கைதட்டல்! கூத்தின் பாடல்கள், காட்சிகளுக்கு உணர்வுபூர்வ இசையை பொன்னுச்சாமி - பழனிச்சாமி குழுவினர் வழங்கினர்.
கம்போடியாவின் அங்கோர்வாட் நக ரில் அரங்கேற்றப்பட்ட தெருக்கூத்து வடிவி லான இந்த நந்திவர்மன் நாடகம், இந்தி யாவின் கலாச்சார நகரமான சென்னையின் சபாக்களிலும் அரங்கேறினால் தமிழுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்!
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago