மகா சமாதி தினத்தில் அரங்கேறும் ‘பாபா ஷீரடி சாய்பாபா’ நாடகம்

By யுகன்

சமூக நாடகங்களோ, ஆன்மிக நாடகங்களோ.. எதுவானாலும், எங்களால் சிறப்பாக நடத்த முடியும் என்ற உத்வேகத்துடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நாடக மேடை யில் தோன்றியவர்கள் ‘மகாலஷ்மி லேடீஸ் டிராமா’ குழுவினர். பாம்பே ஞானத்தின் முயற்சியில் உருவான இந்தக் குழுவின் 21-வது தயாரிப் பாக உருவாகிறது ‘பாபா ஷீரடி சாய்பாபா’ நாடகம்.

இக்குழுவினரால் இதற்கு முன்பு அரங்கேறிய ஆன்மிக நாடகங் களான ‘பகவான் போதேந்திராள்’, ‘பஜகோவிந்தம்’, ‘பக்த ஜெய தேவர்’, ‘ரமணர்’ ஆகியவை இந்தியாவின் பல மேடைகளிலும் இந்தியர்கள் வாழும் பல நாடு களிலும் மாபெரும் வரவேற்பை பெற்றிருப்பவை. மகாலஷ்மி லேடீஸ் டிராமா குழுவினரின் 5-வது ஆன்மிக நாடகமான ‘பாபா ஷீரடி சாய்பாபா’ அவரது மகா சமாதி தினமான அக்டோபர் 15-ம் தேதி சென்னை நாரத கான சபா வில் அரங்கேற இருக்கிறது.

இந்த நாடகம் குறித்து பாம்பே ஞானத்திடம் பேசியதில் இருந்து..

எங்கள் நாடகத்தில், மேடையில் தோன்றி நடிக்கும் அனைவருமே பெண்கள்தான் என்பது எங்கள் குழு வின் தனிச்சிறப்பு. பேக்-ஸ்டேஜில் மட்டும்தான் ஆண்களின் உதவி யைப் பெறுவோம். தவிர, இதில் நடிப்பதற்கு யாருக்கும் ஊதியம் கிடையாது. எல்லோரும் தன்னார் வத்தோடு நடிக்கிறார்கள். இந்த நாட கத்தின் கதை, வசனம் எழுதி, இயக் கும் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன்.

எல்லோருக்கும் பாபாவின் அருள்

பொதுவாக எங்கள் நாடகங் களுக்கு டிக்கெட் போட்டு காசு வசூ லிப்பதில்லை என்பதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறோம். இந்த நாடகத்தை முழுமையாக பார்த்து, ரசித்து, பாபாவின் அரு ளைப் பெற வேண்டுமானால், நாட கம் தொடங்குவதற்கு அரைமணி முன்பாக ரசிகர்கள் வரவேண்டும். அப்படி செய்தால் கடைசிநேர பரபரப்பை தவிர்க்கலாம். ஏறக் குறைய 80 ஆண்டுகள் வாழ்ந்த பாபாவின் வாழ்க்கையை, தேஜஸ் வினி, வர்ஷா, சுசித்ரா ஆகியோர் பாபா வேடமேற்று மேடையில் காட்சிப்படுத்துகின்றனர்.

பாபாவின் பிறப்பு பற்றிய செய்தி, அவர் வாழ்ந்த விதம், நிகழ்த் திய அற்புதங்கள் போன்றவற்றை நாடகத்தில் கொண்டுவந்திருக் கிறோம். பல்வேறு அற்புதங்கள், அரிய சம்பவங்களை உள்ளடக்கிய பாபாவின் அருள்கடலை ஒரு சிமிழிக்குள் அடைக்க முடியாது. எங்களால் இயன்றவரை அவரது பல அற்புதங்களை நாடகத்தில் கொண்டு வருவோம்.

பாபா குறித்த தகவல்களை திரட்டி, அதை சரிபார்த்து, ஆராய்ச்சி பூர்வமான விவாதங்களுக்குப் பிறகு, அதை எளிமைப்படுத்தி, அதன் பிறகுதான் எழுத்துப் பணியை தொடங்கினோம். பின்னர், முழு நாடகத்துக்கான வசனங்கள், இசையை பதிவு செய்யும் மிகப் பெரிய பணி. நடிப்புக்கு ஏற்றபடி டப்பிங் பேசிவிடலாம். ஆனால் ஏற்கெனவே உணர்ச்சியோடு பேசி பதிவு செய்யப்பட்ட வசனங் களுக்கு, மேடையில் வாயை அசைத்து நடிப்பது பெரிய சவால். ஆனால், 25-க்கும் மேற்பட்ட எங்கள் குழுவின் பெண்கள் மேடையில் தோன்றி நடிக்கும்போது, ரசிகர் களுக்கு எந்த வித்தியாசமும் தெரி யாது.

நம்பிக்கையும், பொறுமையும் பாபாவின் தாரக மந்திரம். பொறுமை யும், எளிமையுமாக வாழ்ந்து காட்டி யவர் ஷீரடி சாய்பாபா. அதனால் தான் அவரால் இயற்கையை கட்டுப்படுத்த முடிந்தது. பெரு மழை, இயற்கைப் பேரிடரில் இருந்து ஒருமுறை மகாராஷ்டிராவின் ஒரு கிராமத்தையே காப்பாற்றி இருக் கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பலரை குணப்படுத்தியிருக்கிறார். அவர் தொடுவதும், பேசும் வார்த்தை களுமே மகிமை வாய்ந்தவையாக அறியப்பட்டன. அவர் அளிக்கும் விபூதியின் மகிமையே தனி. இந்த அற்புதங்களை விளக்கும் பிரம் மாண்ட காட்சிகளையும் ‘பாபா ஷீரடி சாய்பாபா’ நாடகத்தில் பார்க்கலாம்.

இவ்வாறு பாம்பே ஞானம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

மேலும்