நூல் நோக்கு: புகைப்பழக்கத்தைக் கைவிட எளிய வழி!

By சந்தனார்

புகைப்பழக்கத்தின் விளைவுகளைப் பற்றி ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர், அது தொடர்பான அனுபவங்களை முன்வைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்களை ஆலன் கார், ஜாக்குலின் ரோஜர்ஸ் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். நேரடி அனுபவங்கள் என்பதால் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகங்கள் இவை. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் அரிது.

இந்நிலையில், ஷாஜஹான் எழுதியிருக்கும் ‘அவசியம்தானா ஆறாம் விரல்?’ புத்தகம் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேறத் துடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல ஆண்டுகளாகப் புகைப்பழக்கத்தைத் தொடர்ந்துவந்த ஷாஜஹான் அதிலிருந்து விடுபட்ட அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பதிவுசெய்திருக்கிறார். இதுதொடர்பாக, ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவுகளுடன், புகைப்பழக்கம் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள், மருத்துவரீதியான பாதிப்புகள் என்று பல்வேறு விஷயங்களை  விரிவாக எழுதியிருக்கிறார்.

புகையிலையை ஒழிக்க முயன்று தோற்றுப்போன அரசுகள் ஒருகட்டத்தில் வருவாய்க்கான அம்சமாக அதைப் பார்க்கத் தொடங்கிய பின்னர் நிகழ்ந்த மாற்றங்கள், புகைப்பழக்கத்துக்கு ஆளாகிறவர்களுக்குத் தூண்டுதலாக இருக்கும் விஷயங்கள், உயிரிழப்புகள் என்று புள்ளிவிவரங்களின் பின்னணியில் பல்வேறு தகவல்கள் இப்புத்தகத்தில் உண்டு. புகைப்பழக்கம், புகையிலைப் பயன்பாடு ஏற்படுத்தும் நோய்களுக்கான மருத்துவ செலவு தனிநபர்கள், குடும்பங்கள், அரசுகளிடம் ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகளையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

தங்களது புகைப்பழக்கத்தால் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணராதவர்கள், அதிர்ச்சிகரமான உண்மைகளை முன்வைக்கும் இப்புத்தகத்தைப் படித்தால் புகைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவுக்கு வருவார்கள். புகைப்பழக்கத்தைத் துறப்பதில் இருக்கும் அன்றாடச் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்று வழிகாட்டும் குறிப்புகளும் புத்தகத்தில் உண்டு.

அவசியம்தானா ஆறாம் விரல்?

ஷாஜஹான்

உடுமலை.காம் வெளியீடு

உடுமலைப்பேட்டை – 642126.

விலை: ரூ.90

 04252-222885 / 7373737740

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்