நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. மனித குலத்துக்கு எதிரான தீவிரவாதம் - அவ நம்பிக்கை . அழிவில் இருந்து மீண்டு எழுவது - நம்பிக்கை.
கடந்த 2003 ஆக. 29-ல் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந் தது. அதில் நேரடியாக பாதிக்கப்பட்ட சிலரின் வாழ்க்கை ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு எப்படி இருக்கிறது? சமூகத்தின் மீதும், தனி மனித உறவுகளின் மீதும் அவர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை பதைபதைக்கும் 120 நிமிடங் களில் நம் முன்பு காட்சிப்படுத்து கிறது ‘ஆல்கெமி தியேட்டர்ஸ்’ வழங்கிய `ஒன் டிகிரி செகண்ட்’ தமிழ், ஆங்கில நாடகம்.
ஒட்டுமொத்த நாடகத்தையும் ஒரு காபி ஷாப்புக்குள்ளேயே நடத்தியிருக்கும் இயக்குநர் விஜய் விஸ்வநாதனின் திற மைக்கு ஒரு சல்யூட். கதை - வசனத்துடன், ஒளி பொறுப்பையும் கவனித்திருக்கிறார்.
தங்களின் மகனை இழந்து தவிக்கும் பிரதான பாத்திரங்களான சந்துரு, ருக்மணி தம்பதி பற்றி மட்டும் ரசிகர்களுக்கு கோடிட்டு காட்டிவிட்டு, மீதி இருப்பவர்கள் எல்லோரையும் சந்தேக வளையத்துக்குள்ளேயே வைத்து, ஒவ்வொருவரின் பின்னணியைக் குறித்த முடிச்சையும் அவிழ்க்கும்போது, சமீரின் தியாகம், அனுஷ்காவின் தவிப்பு, நவீன யுகத்தின் அடையாளமான ரோஹித்தின் அவசரம் என பல உணர்ச்சிகள் ஒவ்வொரு பாத்திரங்களின் வழியாகவும் ரசிகர்களை தாக்குகின்றன.
அனுஷ்கா (பத்மா) இறுக்கமான பாத்திரத்திலும், சமீரின் (வெங்கடேஷ்) அறிமுகத்துக்குப் பின் அவரிடம் தோன் றும் மாற்றங்களையும் வெகு இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக் கிறார்.
ஒலி பெருக்கி இல்லாமல் நாடகத்தை பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தா லும், சில காட்சிகளில் வசனங்கள் கேட் காமல் போய்விடுகிறது. அனுஷ்காவின் இறுக்கத்தை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரே மாதிரி யான பல காட்சிகளைத் திரும்பத் திரும்ப காட்டும் போது சலிப்பு ஏற்படுகிறது. நாடகத்தின் நேரத்தை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்.
வெறுப்பு, கோபம் போன்றவற்றால் சிலரால் ஏற்படுத்தப்படும் இழப்புகள், மனிதர்களிடையே ஏற்படும் விரிசல்களை நாடகத்தின் காட்சிகள் விரிவாக விளக்குகின்றன.
அதே சமயம், நேர்மறை எண்ணம் கொண்டவர்களாலும், தங்களுக்கு எதிரில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது எதிர்பார்ப்பில்லாமல் அன்பை செலுத்துபவர்களாலும் எத் தகைய ஆரோக்கியமான மாற்றங்களை, மகிழ்ச்சியை சமூகத்தில் கொண்டுவர முடியும் என்பதையும் திடமாக பதிய வைக்கிறது நாடகம்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
21 days ago
இலக்கியம்
21 days ago
இலக்கியம்
21 days ago
இலக்கியம்
2 months ago