‘கலை’யாத கனவு!

By மு.முருகேஷ்

முகம் முழுக்க அடர்ந்த புன்னகையோடும் மனம் முழுக்க பொதுவுடைமை சிந்தனையோடும் வலம்வந்தவர் தோழர் ‘கலை’ மணிமுடி. சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாடுகளுக்கு முன்னோடியாய் இருந்து வழிநடத்தியவர். முற்போக்குச் சிந்தனையாளர். 1999-ல் ‘கலை’ சிற்றிதழைத் தொடங்கி முற்போக்குப் படைப்பாளிகளுக்கான தளமாக 2007 வரை தொடர்ந்து வெளியிட்டார்.

அறந்தை நாராயணன், கடலூர் பாலன், பா.முத்துச்சாமி ஆகிய முன்னோடிகளின் பெயர்களில் விருதுகள் வழங்கி படைப்பாளிகளைக் கெளரவப்படுத்தினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராக இருந்து, இளம் படைப்பாளர்கள் பலரையும் அடையாளங்கண்டார். அவர்களுக்கு மேடையமைத்துத் தந்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர உதவினார். ‘உஷாராயிரு’, ‘கடலோரம்’, ‘பாரா ஜனம்’ போன்ற கவிதை நூல்களை எழுதினார்.

அது மட்டுமல்லாமல், அரசியல் கட்டுரைகள் எழுதுவதிலும் வல்லவர். இசையுணர்வுமிக்க இவர், மறைந்த கவிஞர்களின் பாடல்களுக்கு இசையமைத்து குறுந்தகடு வெளியிடும் பணியில் இருக்கும்போதே காலம் அவரைப் பறித்துக்கொண்டது. கடந்த ஜூன் 18 அன்று காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

மேலும்