புனைவல்லாத எழுத்துக்கான வுமன்ஸ் பிரைஸ் 2025க்கான குறும் பட்டியலில் ஆறு எழுத்தாளர்களின் ஆறு புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அல்புனைவு எழுத்தில் பெண்களின் திறமையையும் அசல் தன்மையையும் போற்றும்விதமாக இந்தத் தேர்வு அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் வெவ்வேறு துறை சார்ந்த பெண்களின் எழுத்துத் திறமையையும் ஆய்வின் அடிப்படையிலான எழுத்தையும் ஊக்கு விக்கும் வகையில் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஆறு புத்தகங் களும் நம்பிக்கையையும் மாற்றத்துக்கான தேவையையும் அடிப்படையாகக் கொண்டதன் மூலம் ஒரு புள்ளியில் இணை கின்றன.
நேனே செர்ரி எழுதிய, ‘A Thousand Threads’, ரேச்சல் கிளார்க் எழுதிய, ‘The Story of a Heart, க்ளோயே டால்டன் எழுதிய, ‘Raising Hare’, கிளார் மல்லி எழுதிய, ‘Agent Zo: The Untold Story of Fearless WW2 Resistance Fighter’, ஹெலன் ஸ்கேல்ஸ் எழுதிய, ‘What the Wild Sea Can Be: The Future of the World’s Ocean’, யுவான் யாங் எழுதிய, ‘Private Revolutions: Coming of Age in a New China’ ஆகியவைதான் குறும்பட்டியலில் இடம்பெற்றி ருக்கும் ஆறு புத்தகங்கள்.