கண்ணன் வந்த நேரம் - நாடக விமர்சனம்

By யுகன்

‘இந்த நாடகத்​தில் வரும் சில நிகழ்ச்​சிகள், பொது​வாக நம் நாட்​டில் நடை​பெறும் சில சம்​பவங்​களை அடிப்​படை​யாக வைத்து கற்பனை​யுடன் சேர்த்து எழுதப்​பட்​டது. யாரை​யும், எந்த தரப்​பினரை​யும், அமைப்​பு​களை​யும் குறிப்​பிடு​பவை அல்ல என்​பதை பணிவன்​போடு தெரி​வித்​துக் கொள்​கிறோம்’ - என்ற பொறுப்பு துறப்பு வரும்​போதே நிமிர்ந்து உட்​கார வைக்​கிறது நாடகம்.

ஆன்​மிக சொற்​பொழி​வாளர் சுந்​தர​ராஜ பாகவதரிடம் நீண்​ட​கால​மாக இருக்​கும் ஒரு கண்​ணன் பொம்​மை, அரசி​யல்​வா​தி​யான பாண்​டியனின் வீட்​டுக்கு வந்​து​விடு​கிறது.

அதன்​பிறகு, பாண்​டியனின் வாழ்க்​கை​யில் பல திருப்​பங்​கள் ஏற்​படு​கின்​றன. நாத்​தி​க​ரான பாண்​டியனுக்கு கடவுள் நம்​பிக்கை வந்​த​தா? திரு​மண​மாகி குழந்​தைப் பேறுக்​காக பல காலம் காத்​திருக்​கும் இவர்​களுக்கு மழலை செல்​வம் கிடைத்​த​தா? எனும் கேள்வி​களுக்கு பதில் சொல்​கிறது நாடகம்.

கட்சி மாறும் அரசி​யல்​வாதி மூல​மாக, புதிய கட்​சிகளை​யும்​கூட கலாய்க்​கிறார் நாடகத்தை எழு​தி, இயக்​கி​யுள்ள குடந்தை மாலி. போலி பகுத்​தறி​வு​வாதம், போலி பக்​தி, ஆன்​மிக அரசி​யல் ஆகிய​வற்றை தனக்கே உரிய தைரி​யத்​தோடு விமர்​சிக்​கும் 90 வயது இளைஞ​ரான அவரது தீரத்தை பாராட்​டியே ஆகவேண்டும்.

பகுத்​தறிவு கட்​சியை சேர்ந்த பாண்​டியனும் (கணேஷ்.ஜி), அவரது மனைவி கயல்​விழி​யும் (நாஞ்​சில் ரேவ​தி) மொத்த நாடகத்​தை​யும் தாங்​கிப் பிடிக்​கின்​றனர். உறுத்​தாத ஒளி, ஒலியை வழங்​கு​கிறார் கலை​வாணர் கிச்​சா. அரங்க அமைப்​பும், நாடகத்​தில் இடம்​பெறும் பாடல்​களும் ரசனை. ‘அரசி​யல்​வா​தி​களே இப்​படித்​தான்’ என்​பது​போலவே நாடகம் முழு​வதும் காட்​டு​வதும், டாக்​ட​ராக வருபவர் திடீரென சுந்​தர​ராஜ பாகவத​ராக மாறி ஆன்​மிக சொற்​பொழி​வு நிகழ்த்​து​வதும்​ நெருடல்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

மேலும்