சுதந்திர நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு
ஜெகாதா
நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.230
தொடர்புக்கு: 8015827644
பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்குப் பிறகு இந்தியாவைச் செதுக்கிய சிற்பியான நேருவைப் பற்றிய நூல் இது. அந்தக் காலகட்டத்தின் பல தகவல்களை இந்த நூல் தொகுத்துள்ளது.
வேங்குடி வயல்
அண்டனூர் சுரா
நாற்கரம் பதிப்பகம்
விலை: ரூ.220
தொடர்புக்கு: 95510 65500
வேங்கைவயல் பிரச்சினையை நினைவூட்டும் வகையில் மாய யதார்த்தபாணியில் எழுதப்பட்ட நாவல் இது.
எரிதழல் பாரதி
டி.வி.ராதாகிருஷ்ணன்
புஸ்தகா பதிப்பகம்
விலை: ரூ.280
தொடர்புக்கு: 7418555884
பாரதியார் அவரது படைப்புகள் எப்படிப்பட்டவை எனப் பல விஷயங்களை இந்த நூலில் எளிமையாக எழுதப்பட்டுள்ளன.
பட்டினப்பாலை
வாரேன் வாழிய நெஞ்சே!
விஜயானந்தலட்சுமி
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 044 24896979
கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலை சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமையைக் கூறுகிறது. இதன் விளக்கத்தைத் தரும் நூல் இது.