இலக்கியம்

என்ன செய்தது மார்க்ஸியம்?

செய்திப்பிரிவு

இடதுசாரி கொள்​கைகளும் இயக்​கங்​களும் காலங்​காலமாக விமர்​சிக்​கப்​பட்டு வருகின்றன. இந்த நூல் அதன் காரணாகாரியங்களைத் தேடி தர்க்​கபூர்​வமான விமர்​சனத்தை ஆழமாக முன்​வைக்​கிறது. பொருள்​முதல்​வாதம், கருத்​து​முதல்​வாதம் ஆகிய கருத்​தாக்கங்​களி​லிருந்து இந்த நூலை அரவிந்தன் நீலகண்டன் விரிவாகத் தொடங்​கு​கிறார்.

ஜெர்​மானிய அறிஞர் ஃப்ரடரிக் ஹெகல், தன் தத்துவ வாசிப்​பின் வழி இருப்பை முரண்​படும் இரட்​டைகளாக அறிந்​தார். இந்த முரண்​படும் இரட்​டைகள் என்கிற அம்சத்​தைத்​தான் காரல் மார்க்ஸ் சுவீகரித்​துக்​கொண்​டார் என நூலாசிரியர் மதிப்​பிடு​கிறார்.

இருப்​பின் இந்த முரணை பொருள்வாத முரணி​யக்​கமாக மார்க்ஸ் மாற்றி எழுதினார் என்பது அரவிந்​தனின் துணிபு. உற்பத்தி உறவுகளை அடிப்​படை​யாகக் கொண்டு வர்க்கம் கட்டி அமைக்​கப்​பட்டு சோஷலிஸம் உருவாகும் என்கிற மார்க்ஸின் பார்​வைக்கு முடிவு என்ன, எனக் கேள்வி எழுப்பு​கிறார் நூலாசிரியர்.

பாட்​டாளி வர்க்கச் சர்வா​தி​காரத்​துக்​குப் பிறகு என்ன ஆகும் என்கிற கேள்​வியை​யும் எழுப்பு​கிறார். மார்க்ஸியச் சித்தாந்​தத்தை வழிநடத்த ஒரு புரட்​சிகர அமைப்பு தேவை என லெனின் கருதினார். உலகமெங்​கும் சோஷலிஸம் ஏற்படக் காத்​திருக்க வேண்​டிய​தில்லை; புரட்சி ஏற்படும் நாடுகளை சோஷலிஸ நாடாக மாற்ற வேண்​டும் என ஸ்டா​லின் கருதினார் .

இவ்வாறு நூலாசிரியர் சொல்​கிறார். மாவோ, விவசாய குட்டி பூர்​ஷ்வாக்​களின் புரட்​சியை மார்க்ஸி​யமாக வியாக்​கி​யானம் செய்​து​கொண்​டார் என அரவிந்தன் விமர்​சிக்​கிறார். லெனின், ஸ்டா​லின் காலகட்​டத்திய இரு கட்டுரைகள் வழி அரவிந்தன் விவரிக்​கிறார். புரட்​சிக்​குப் பிறகு நாடாளு​மன்ற ஜனநாயக முறையைச் சிலர் முன்​மொழிந்தது குறித்​தும் இந்தப் பகுதி​யில் நூலாசிரியர் சொல்​கிறார்.

ஸ்டா​லின் கட்டாயக் கூட்டுப்​பண்ணை வேளாண்​மைக்கு உழவர்களை நிர்ப்​பந்​தித்தது குறித்து கட்டுரை​யாளர் விமர்​சனங்களை முன்​வைக்​கிறார். ஸ்டா​லினின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசி​யதற்​காக நிகோலாய் புகாரின் தண்டிக்​கப்​பட்​டதை​யும் இந்த நூல் சொல்​கிறது.

அரசுக்கு எதிராகக் கருத்​துச் சொல்​லும் தலைவர்கள் எல்லாரும் கொல்​லப்​பட்​டுள்​ளனர் என்றும் அந்தக் கட்டுரை சுட்​டிக் காட்டு​கிறது. மார்க்​ஸியக் காலத்​தில் உருவான பஞ்சங்​களைச் சுட்டி, அவை முதலா​ளி​களால் மட்டும் உருவாக்​கப்​பட்டவை அல்ல என்ப​தை​யும் கட்டுரை கூறுகிறது.

நேரு​வின் சோஷலிஸ ஈடுபாடும், ஸ்டா​லினின் திட்​டங்​களால் ஈர்க்​கப்​பட்டு ஐந்தாண்​டுத் திட்​டங்களை அவர் உருவாக்​கியதை​யும் இந்த நூல் குறிப்​பிடு​கிறது; இதனால் ஏற்பட்ட பல​வீனங்​களை​யும் சுட்டு​கிறது. இந்​தி​யப் பிராந்​தி​யத்​தில் மார்க்ஸி​யம் என்கிற சித்தாந்​தம் என்ன செய்தது என்​ப​தை​யும் இந்த நூல் ​விரிவாகச் சொல்​கிறது. - விஜித்ரன்

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
அரவிந்தன் நீலகண்டன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 8148066645

உளவு முகமையின் உண்மை முகம்: பாலஸ்தீனத்தின் முக்கியத் தலைவர் மஹ்மூத் அல்-மபூஹ் கொலையை ஒரு சினிமா காட்சி போல சித்தரிக்கும் அத்தியாயத்துடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. மொஸாட்டின் இயல்பு என்ன, அதன் செயல்படும் விதம் எப்படி என்பன பற்றியெல்லாம் நூலாசிரியர் அறிமுகம் செய்துவைக்கிறார். இந்தக் கொலைக் காட்சியை வாசிக்கும்போது நிஜம், சினிமாவைவிட எவ்வளவு தீவிரமானது என்பது புலனாகிறது.

அதுபோல் மொஸாட்டின் பிரபலமான உளவாளி எலியாஹூ கோஹன் குறித்த சித்தரிப்பும் சுவாரசியமானது. அவரை உளவுக்காகத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி அவர் சிரியாவில் தன் உளவுப் பணியைத் தொடங்கியது வரையிலான விவரிப்பின் வழி உளவு அமைப்பின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது. உலக அளவில் பிரசித்திபெற்ற இத்தாலியின் உளவு அமைப்பான மொஸாட் பற்றிய முழுமையான சித்திரத்தை இந்தப் புத்தகம் அளிக்கிறது. - விபின்

மொஸாட்
நன்மாறன் திருநாவுக்கரசு
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044 42009603

SCROLL FOR NEXT