தமக்கு வேண்டிய தகவல்களை மட்டுமல்லாமல்; திறன்களையும் அறிவாற்றலையும் எளிதில் வசப்படுத்தும் வரப்பிரசாதத்தை இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இருப்பினும், அந்த வளர்ச்சியை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறினால், ஏற்றத்துக்கு உதவும் தொழில்நுட்பமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக மாறிவிடும். இந்தச் சூழலில், பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர் எழுதியிருக்கும் ‘வெல்லப் போவது நீ தான்’ எனும் இந்த நூல் முக்கியத்துவம் பெற்றதாக மாறுகிறது.
இன்றைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில், தேவைகளுக்கு அதிகமாகக் கிடைக்கும் திறன்களையும் அறிவாற்றலையும் கையாளும் சூட்சுமத்தை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் விதமாக இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார். ஒரு பேராசிரியர் என்கிற ஸ்தானத்திலிருந்து அவர் இந்த நூலை எழுதவில்லை என்பது, இதன் முக்கிய அம்சம். இந்த நூலின் நடை உரையாடலைப் போன்று எளிமையாக அமைந்திருக்கிறது.
வெல்லப்போவது
நீ தான்
பேராசிரியர்.அ. முகமது அப்துல்காதர்
விலை: ரூ.130
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562
கவிதை நூல் வெளியீட்டு விழா | திண்ணை: ஜோசப் ராஜாவின் ‘காத்திருக்கும் சாவிகள்’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (15.02.25) மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெறவுள்ளது. தொல்.திருமாவளவன், அருள்மொழி, ஆதவன் தீட்சண்யா, செழியன், ஜி.செல்வா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கூத்துப்பட்டறை நாடக நிகழ்வு: சென்னை விருகம்பாக்கம் கூத்துப்பட்டறையில் பிரகலாத சரித்திரம் புராணக் கதை ‘தூண்’ என்கிற தலைப்பில் நாடகமாக இன்று (15.02.25) முதல் 19.02.25 வரை தினமும் மாலை 7 மணிக்கு நிகழ்த்தப்படவுள்ளது. தொடர்புக்கு: 9003290306