நாடக உலா: ‘திருநாராயணா’

By யுகன்

ஸ்ரீரங்கம் (கோயில்), திருமலை (திருப்பதி), வரத ராஜ பெருமாள் கோயில் (காஞ்சிபுரம்), யதுசைலா (மேல்கோட்டை) இந்த 4 திவ்ய தேசங்களும் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமானவை. அதிலும், யதுசைலா (மேல்கோட்டை) மகா விஷ்ணுவுக்கே விருப்பமான தலம் எனும் குறிப்புகள் வேதங்களில் இருக்கின்றன.

அப்படிப்பட்ட மேல்கோட்டையைப் பற்றியும் அங்கு கோயில் கொண்டுள்ள திருநாராயண னின் பெருமைகளையும் ‘திருநாராயணா’ நாட்டிய நாடகம் தத்ரூபமாக காட்சிப்படுத்தியது.

ஏற்கெனவே அரங்கனின் பாதையில் (ஸ்ரீரங்கம்), ஸ்ரீநிவாஸம் பிரபதே (திருமலா), வரதர் (காஞ்சிபுரம்) ஆகிய படைப்புகளை சிறந்த முறையில் காட்சிப்படுத்திய ‘தர்ஷன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்’ வழங்கிய பெருமைமிகு படைப்பு தான் ‘திருநாராயணா’ நாட்டிய நாடகம். திருநாராயணனைக் காண நாரத கான சபாவில் அரங்கம் கொள்ளாத பக்தர்களின் கூட்டம்.

வரலாற்றுரீதியான செய்திகளுடனும், பழமை யான தமிழ் இலக்கியங்கள், பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளின் துணை கொண்டும் நாடகத்துக்கான கருவை நேர்த்தியாக வடிவமைத் திருந்தார் டாக்டர் ஆஷா கிருஷ்ணகுமார்.

பிரபந்தப் பாடல்களும் ஆண்டாள் பாசுரங் களும், நாட்டுப்புறப் பாடல்களும் டாக்டர் ராஜ்குமார் பாரதியின் தேனிசையால் பக்தி மணம் பரப்பின. 30-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கான நாட்டிய முறைகளை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் நாட்டிய ஆசான் ஜெயந்தி சுப்ரமணியம்.

ஒட்டுமொத்த நாட்டிய நாடகமும் 5 பகுதி களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஒவ் வொரு பகுதியைத் தொடங்கும் முன்பும் அப்பகுதியில் இடம்பெறும் சம்பவங்களை, கதை சொல்லிக்கு உரிய கவனத்துடன் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டது, நாட்டிய நாடகத்தை முதன்முறையாகப் பார்க்கும் ரசிகருக்கும் கதையை நெருக்கமாகக் கொண்டுசெல்ல உதவியது.

விஷ்ணு திருநாராயணபுரத்தின் அமைதியை யும் பெருமையையும் கூறுவது, திருநாராயண ரின் மூலவர் விக்கிரகத்தை ராமானுஜர் கண் டெடுப்பது, உற்சவ மூர்த்தியை டெல்லி சுல்தானிடம் இருந்து பெற்றுவருவது, பெருமாளுக்கு வைரத்தால் செய்யப்பட்ட ராஜமுடியை அர்ப் பணிக்கும் ராஜ உடையார், பெருமாளுடனே ஐக்கியமாகும் கதை, பெருமாளின் வைரமுடியை விருச்சகன் கவர்ந்து செல்ல, அவனுடன் போரிட்டு அதை மீட்கும் கருடன், அதை மீண்டும் திருநாராயணனின் திருமுடியில் சாற்றும் வைர முடி சேவையின் கதை மிகவும் தெளிவாக நாட்டிய நாடகத்தின் மூலம் சொல்லப்பட்டது.

மேடைக்கு மேலேயே கம்பீரமாக மேல்கோட்டையை தரிசனப்படுத்திய சண்முகத்துக்கும் ஒளிவிளக்குகளின் மூலமாகவே உணர்வுகளைக் கடத்திய முருகனுக்கும் சிறப்பான பாராட்டுகள்.

எத்தனையோ கலைஞர்கள் இருந்தாலும், டெல்லி இளவரசி பீவி நாச்சியாராக வந்த குமரி யும் செல்லப்பிள்ளையாக வந்த குழந்தையும் அரங்கத்தில் இருந்தவர்களின் மனத்தில் அன்புடன் ஒட்டிக்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

2 months ago

மேலும்