வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும் - ந.கோவிந்தராஜன் - க்ரியா பதிப்பகம், 7299905950
ஆங்கிலேயர்களுக்கும் தமிழ் மொழிக்குமான தொடர்பைப் பல்வேறு ஆவணச் சான்றுகளுடன் விவரிக்கும் நூல் இது. ஆங்கிலேயர்கள் தமிழை எதிர்கொண்ட விதம் ஆய்வு நோக்கில் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.
மானிடவியல் பேசுவோம் ஒரு பின்காலனியக் கதையாடல் - பக்தவத்சல பாரதி - அடையாளம், 90949 90900
பின்காலனியத்திற்குப் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ்ப் பண்பாட்டை முன்வைத்து பக்தவத்சல பாரதி இதில் விளக்குகிறார். பலம் பொருந்திய நம் பண்பாடு, இலக்கியம் மூலம் நவகாலனியத்தை எதிர்கொள்வதற்கான சாத்தியங்களை இந்த நூல் முன்வைக்கிறது.
பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியன் - அன்னம் - அகரம் பதிப்பகம், 75983 06030
தமிழ்நாட்டுக் கோயில்களின் சிறப்புகளை சிற்பம், வரலாறு, இலக்கியம் ஆகிய பொருள்களில் குடவாயில் பாலசுப்ரமணியன் விவரிக்கிறார். சில கோயில்களில் பனை மரங்களே தல விருட்ச மரங்கள் என்கிற தகவலையும் இந்த நூல் பதிவு செய்கிறது.
சாதியின் பெயரால் - இளங்கோவன் ராஜசேகரன் - கிழக்கு பதிப்பகம், 044 - 4959 5818
இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி - முருகேசன், உடுமலை சங்கர், நந்தீஷ் எனச் சாதியின் பெயரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்கள் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். நம் சமூகத்தில் சாதியின் வெறி வேர்கொண்டது எப்படி என்பதையும் இந்த நூல் பதிவுசெய்கிறது.
துறையாடல் -தொகுப்பு: வறீதையா கான்ஸ்தந்தின் - கடல்வெளி, 94422 42629
கடல் சார் பண்பாடு குறித்து எழுதிவரும் வறீதையா கான்ஸ்தந்தின் சமீபத்திய நூல் இது. தமிழகக் கடற்கரையின் பண்பாட்டைத் திருத்தமாக இந்த நூல் முன்வைக்கிறது. தமிழகக் கடற்கரையைப் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிய முறையில் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
அம்பலமாகட்டும் போலித் தீர்வுகள் (நெகிழிப் பிரச்சினைக்கான தீர்வுகள்) - ஜியோ டாமின் ம - பூவுலகின் நண்பர்கள், 9094990900
ஞெகிழிக் கட்டுப்பாட்டின் சவால்களை, நமது சமூகப் பின்னணியுடன் எதிர்கொள்வதன் சாத்தியங்களைச் சொல்லும் நூல் இது. ஞெகிழிக் கட்டுப்பாட்டில் ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட தீர்வுகளின் பலவீனத்தையும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது.
பாலஸ்தீனம்: களவாடப்பட்ட தாயகம் - அறிவொளி - மனிதன் பதிப்பகம், 91712 28280
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை வரலாற்றுப் பின்னணியுடன் முன்வைக்கும் நூல் இது. பாலஸ்தீன மக்களின் நிலத்தில் பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலை, அமெரிக்கா போற்றிவருவதன் பின்னணியையும் இந்த நூல் அம்பலப்படுத்துகிறது.
தீட்டுப் பறவை (ஒரு திருநங்கையின் அமெரிக்க நாட்குறிப்புகள்) - கிரேஸ் பானு - திருநங்கை பிரஸ், 96592 78474
புறக்கணிப்புகள் நிறைந்த சமூகத்திலிருந்து அமெரிக்கா சென்ற திருநங்கை கிரேஸ் பானுவின் பயண அனுபவங்கள்தாம் இந்த நூல். தன் அனுபவங்களை திருநங்கைச் சமூகம் எதிர்கொண்ட பொது அனுபவமாக முன்வைக்கும் விதத்தில் இந்த நூல் விசேஷமானது.
மதுரைப் பதிப்பு வரலாறு - பொ.ராஜா - நீலம் பதிப்பகம், 63698 25175
சென்னைக்கு வெளியே தமிழ்நாடு பதிப்பு வரலாற்றின் புதிய சாளரத்தைத் திறக்கும் நூல் இது. மதுரையின் பதிப்புச் செயல்பாடுகளை ஆராயும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நூல்கள், அச்சகங்கள், பதிப்பாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் எனப் பலவகையான தகவல்களைக்கொண்டு வலுவான ஆய்வுத் திரட்டுடன் வெளிவந்திருக்கிறது இந்நூல்.
ஆதி திராவிடர் வரலாறு - ஆ. பெருமாள் பிள்ளை (பதிப்பாசிரியர்: வாலாசா வல்லவன்) - திராவிடன் ஸ்டாக், 90927 87854
சங்க இலக்கியம் முதல் 19ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை பல நூல்களை இந்த நூலில் மேற்கோள் காட்டி திராவிடர் வரலாற்றை நிறுவுகிறார் பெருமாள் பிள்ளை. இன்றைய காலக்கட்ட அரசியல் பின்னணியில் வாசிக்கப்பட வேண்டிய நூல் இது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
13 hours ago
இலக்கியம்
13 hours ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
21 days ago