மொழிபெயர்ப்புகள் | 2024-ல் கவனம் பெற்ற நூல்கள்

By செய்திப்பிரிவு

வியத்தகு இந்தியா - ஏ. எல். பாஷம் (மொழிபெயர்ப்பு: க. பூரணச்சந்திரன்) - அடையாளம் 87545 07070

சிந்துவெளி நாகரிகம் தொடங்கி இந்தியாவின் வளமான பண்பாட்டை விவரிக்கும் புத்தகம் இது. இந்தப் புதிய பதிப்பில், ஏராளமான படங்களும் நூலாசிரியரின் இறுதிச் சேர்ப்புகளும் பாஷமின் மாணவர் பேரா. தாமஸ் ஆர். டிரௌட்மனின் முன்னுரையும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இந்தியா எனும் கோணல் மரம் - பரகால பிரபாகர் (மொழிபெயர்ப்பு: ஆர். விஜயசங்கர்) - எதிர் வெளியீடு 04259 226012

எதிலும் சமரசம் நடைபெற்றுவரும் சூழலில் தீரம்மிக்கத் தன் விமர்சனக் குரலை அதிகாரத்தை நோக்கி எழுப்பியவர் பரகால பிரபாகர். அவரது கட்டுரைகளின் தொகுப்பு இது. ஜனநாயகம், சமூக நல்லிணக்கம் போன்றவற்றின் எதிர்காலம் குறித்து அவர் இதில் விவரிக்கிறார்.

தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் - எஸ். ஜெயசீல ஸ்டீபன் (மொழிபெயர்ப்பு: கி. இளங்கோவன், புதுவை சீனு. தமிழ்மணி) - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் 044 2625 1968

மக்களின் தொழில்கள் சாதிகளாக மாற்றம் பெற்றதைத் தெளிவாக இந்த நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சம உரிமைக்காக நடந்த போராட்டங்கள் என சாதி பற்றிய விஷயங்களையும் சொல்கிறது இந்நூல்.

உழவர் எழுச்சி பயணம் - மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் - (மொழிபெயர்ப்பு: விவேக்) - சிந்தன் புக்ஸ் 94451 23164

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சம்யுக்த கிஸான் மோர்ச்சா என்கிற ஒரு குடையின் கீழ் விவசாய அமைப்புகள் திரண்டு, டெல்லியை நோக்கி முன்னேறின. இந்தப் போராட்டத்தை நேர்காணல், கட்டுரை எனப் பல வடிவங்களில் விவரிக்கிறது இந்த நூல்.

விஜய நகரம் - சல்மான் ருஷ்டி (மொழிபெயர்ப்பு: ஆர்.சிவக் குமார்) - காலச்சுவடு 04652 278525

மாயயதார்த்தக் கதை சொல்லல் முறைக்காகப் போற்றப்படுபவர் சல்மான் ருஷ்டி. பம்பா என்னும் பெண் கதாபாத்திரத்தைக் கைபிடித்து தென்னிந்தியப் பின்னணியில் செல்கிறது அவரது இந்த நாவல். பம்பா வழியாக ருஷ்டியின் மாய விளையாட்டும் இதில் நடக்கிறது.

முறிநாவு - மனோஜ் குரூர் (கே.வி.ஜெயஸ்ரீ) - வம்சி 04175 235806

மறைக்கப்பட்ட, உரத்த குரலில் சொல்லப்படாத பண்பாட்டு உறவுகளில் மறைந்திருக்கும் அம்சங்களை மீட்கும் கடந்த காலப் பயணமே இந்த நாவல். 8, 12 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த குமார், அலங்காரர் ஆகியோரின் கதைகளைப் பிணைக்கும் இந்தக் கதை அதன் வழி வரலாற்றை ஆழமாகச் சொல்கிறது.

இலங்கையில் தமிழர்கள் மீதான ஆயுதப்படையினரின் பாலியல் வன்முறை - பிரையன் செனவிரத்னே (மொழிபெயர்ப்பு: வெற்றிவேல்) - போதி வனம் 98414 50437

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள் குறித்து சிங்களத் தரப்பிலிருந்து கேட்கும் ஒரு குரல் இது. தமிழர்கள் மீதான பாலியல் வன்முறையையும் ஆதாரத்துடன் முன்வைக்கிறது இந்த நூல்.

ஜனநாயகத்​தின் சமூக இருப்பு - சுந்தர் சருக்கை (மொழிபெயர்ப்பு​: சீனிவாச ராமாநுஜம்) - எதிர் வெளி​யீடு 04259 226012

பி.ஆர்​.அம்​பேத்​கர், ஜனநாயகம் ஆட்சி வடிவம் மட்டுமல்ல; அது சமூகம், மனக்​கட்​டமைப்பு சார்ந்தது என்கிற கருத்தை முன்​வைக்​கிறார். இதை அடிப்​படை​யாகக் கொண்டு ஜனநாயகத்​தைச் சமூக வாழ்க்கை வடிவ​மாக​ப் பார்க்க வேண்​டும் என்பதை வலி​யுறுத்து​கிறது இந்த நூல்​.

சிவ தாண்டவம்: இந்தியக் கலைகளும் கலாச்சாரமும் - ஆனந்த குமாரசுவாமி (மொழிபெயர்ப்பு: பி. ஆர். மகாதேவன்) - கிழக்கு பதிப்பகம் 044 - 4959 5818

ரவீந்திரநாத் தாகூரால் போற்றப்பட்ட கலை விமர்சகர் ஆனந்த குமாரசுவாமியின் நூல் இது. இந்தியக் கலையை உலகறியச் செய்தவர் இவர். சிவ நடனத்தை விளக்கி 1912இல் ஆங்கிலத்தில் இவர் எழுதிய கட்டுரை இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

காதலர்களாகப் பிரிவோம் - நிசார் கப்பானி (மொழிபெயர்ப்பு: அ.ஜாகிர் ஹீசைன்) - உயிர்மை பதிப்பகம் 044 - 48586727

நவீன காலத்தின் காதல் பிரச்சினைகளை நிசார் கப்பானியின் இந்தக் காதல் கவிதைகள் மெலிதாக்குகின்றன. காதல் கவிதைகளுக்கான முன்னுதாரணமாக இந்தக் கவிதைகளை முன்னிறுத்தலாம். கொள்ளலாம். நேரடியாக அரபியிலிருந்து இந்தக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

14 hours ago

இலக்கியம்

14 hours ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

21 days ago

மேலும்