இலக்கியம்

நூல் வரிசை

செய்திப்பிரிவு

அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்
பழ.கருப்பையா
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044 42009603

இஸ்லாம் சமூகம் ஒருசார்பற்ற தன்னிறைவுச் சமூகம் என்கிறார் பழ.கருப்பையா. நாடு என்கிற எல்லைக்கு அப்பாற்பட்டு, ஒரு சமூகம் அம்மதக் கருத்துகளுக்கு ஏற்ப வாழ்கிறது என்பதை இந்த நூல் விளக்குகிறது.

வேர் பாரு, தழை பாரு
மருத்துவர் சோ.தில்லைவாணன்
எழிலினி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9840696574

நீரிழிவு, மூட்டுத் தேய்மானம், இருதய நோய் போன்ற பல பிரச்சினைகளுக்கு வேரும் தழையும் மருந்தாகும் எனச் சொல்கிறது இந்த நூல்.

புறநானூறு உரை
உரையாசிரியர்: இரா.இளங்குமரன்
முல்லை பதிப்பகம்
விலை: ரூ.600
தொடர்புக்கு: 98403 58301

சங்க இலக்கிய நூலான புறநானூறு நம் பண்பாட்டுக்கான வரலாற்றுச் சான்றும்கூட. அதற்கான உரையைத் தமிழ் அறிஞர் இளங்குமரன் எழுதியுள்ளார். அதன் மறுபதிப்பு இந்த நூல்.

உன்னை மறந்திடவே மறந்துவிட்டேனா
ஜெயமணியன்
ஆரல் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 89399 28388

கவிஞர் வாலி, திருவள்ளுவர் உள்ளிட்ட பல தலைப்புகளில் மரபான பாணியில் கவிதைகள் இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள்-விளக்கங்கள்
எஸ்.எஸ்.ராகவாச்சார்யார்
நர்மதா வெளியீடு
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9840226661

பூஜைக் காலத்தில் கைக்கொள்ள வேண்டிய முத்திரைகள் குறித்து இந்த நூலில் விரிவாகப் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT