நூல் வெளி: நிலத்தின் வாசனை

By நர்மதா குப்புசாமி

க​விஞர் சேரனின் இத்தொகுப்பில் நூற்றிரண்டு கவிதைகள் உள்ளன. அவை காதலை, பிரிவை, போரின் அழிவை, அகதி வாழ்க்கையின் அவலங்களை, உலக அரசியலை, ஈழத்தின் இறுதிப் போருக்குப் பிந்தைய நிலையை, தனிமனிதத் துயரத்தை, மரணத்தை, வாழ்வை என அனைத்​தையும் காலத்தின் சாட்சி​ய​மாகப் பதிவு செய்திருக்​கின்​றன.

​காஞ்சி என்பது திணை எனக் கொள்ளலாம் என்கிறார். ஆனால், காஞ்சி என்பதற்குப் பல விளக்​கங்களை இந்தத் தொகுப்பின் மூலம் சேரன் சொல்கிறார். சேரனின் கவிமொழி, நுண்ணுணர்வும் அழகியலும் நயமும் சொல்நேர்த்தியும் கூடியது. பல தூய தமிழ்ச் சொற்கள் கவிதைகளில் இயல்பாகக் கையாளப்​பட்​டிருக்​கின்றன. மனித வாழ்வின் பாடுகள்தான் அவரது பாடுபொருள். புலம்​பெயர்ந்து, சொந்த நாட்டை மறக்க இயலாத ஒரு கவிமனம் வேறெதைப் பாடும்? இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எந்த ஒரு கவிதையும் படித்து உடனடி​யாகக் கடந்து சென்றுவிட முடியாதவை. அத்தனை அவலமும் துயரமும் நம்மை உறையவைக்​கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE