சிறந்த எழுத்தாளர், தமிழ் நூலுக்கு ஆண்டுதோறும் 2 இலக்கிய விருது: சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சார்பில் தமிழில் சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த நூலுக்கு இந்த ஆண்டு முதல் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை இந்த ஆண்டு முதல் 2 இலக்கிய விருதுகளை வழங்க உள்ளது. அந்த வகையில், தமிழ் எழுத்துலகுக்கு சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர் ஒருவருக்கு ‘சூர்ய விருது’ வழங்கப்படும்.

இது ரூ.3 லட்சம் பரிசுத் தொகை கொண்டது. கடந்த 5 ஆண்டுகளில் வெளியான சிறந்த நூலின் ஆசிரியருக்கு ‘அக் ஷர விருது’ வழங்கப்படும். இது ரூ.2 லட்சம் பரிசு தொகை கொண்டது. விருதாளர்களுக்கு இலச்சினை, பாராட்டிதழ் வழங்கப்படும்.

இந்த ஆண்டில், எழுத்தாளர் அம்பைக்கு படைப்பாளுமைக்கான சூர்ய விருதும், நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘சைக்கோன் - புதுச்சேரி’ என்ற நூலுக்கு அக் ஷர விருதும் வழங்கப்பட உள்ளன.

ஆளுநர் பங்கேற்பு: சென்னையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சாகித்யஅகாடமி செயலர் டாக்டர் சீனிவாச ராவ், டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் கலந்துகொண்டு, விருதாளர்களுக்கு விருது, பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்