சென்னை: எழுத்தாளர் ஜெயந்தனின் நினைவு நாளை (பிப். 7)முன்னிட்டு, படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான நூல்களை மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெயந்தன் சிந்தனைக் கூடல் மற்றும்கோடு ஓவியக் கூடம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எழுத்தாளர் ஜெயந்தன் மறைந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்னும் தன் எழுத்துகளால் வாசகர் நினைவுகளில் உயிர்ப்புடன் இருக்கிறார். அவரது எழுத்துகளை இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கில் `ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது' ஏற்படுத்தப்பட்டது.
மணவை செந்தமிழ் அறக்கட்டளையும், ஜெயந்தன் சிந்தனைக் கூடலும் இணைந்து முதல் 7 ஆண்டுகள் சிறந்த நூல்களுக்கான விருதுகளை தேர்வு செய்து வழங்கின. தற்போதும் இலக்கிய உலகில் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு தனி இடம் உண்டு. சில தனிப்பட்ட காரணங்களால் இடையே 5 ஆண்டுகள் விருதுகள் வழங்கப்படவில்லை.
இலக்கிய நண்பர்களின் வேண்டுகோள், ஆர்வம் காரணமாக மீண்டும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்வை, ஜெயந்தன் சிந்தனைக் கூடலும், கோடு ஓவியக் கூடமும் இணைந்து, புது உற்சாகத்துடன் நடத்த முடிவு செய்துள்ளன.
» அஜித் பவார் தரப்பே அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி: தேர்தல் ஆணையம்
» ‘AI மூலம் ஜெனரேட் செய்த படம்’ - இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் குறிப்பிட மெட்டா திட்டம்
4 பிரிவுகளில் விருது: 2023-ல் பிரசுரமான நூல்கள் விருதுப் பரிசீலனைக்கு வரவேற்கப்படுகின்றன. சிறுகதை, நாவல் (குறுநாவல் அல்ல), கவிதை, நாடகம் ஆகிய 4 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சிறந்த நூலுக்கு ரூ.10,000 விருது வழங்கப்படும்.
நூல்களை அனுப்ப விரும்புவோர், 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான நூல்களில் 3 பிரதிகளை "சீராளன் ஜெயந்தன், எண். 9-பி, மனோகர் நகர் பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை-600100"என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். கூடுதல்விவரங்களுக்கு kodulines@gmail.com என்ற இ-மெயில்முகவரியில் தொடர்புகொள்ளலாம். வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் புத்தகங்களை அனுப்பிவைக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நூல்களின் பெயர்கள் இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படும். நடுவர்களின் பெயர்கள், முடிவுகளுடன் வெளியிடப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட நூல்கள் குறித்து 2 மாதங்களில் அறிவிப்பு வெளியாகும்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago