தமிழ் நவீனக் கவிஞர்கள் பலரிடமும் தாக்கத்தை உண்டாக்கியவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ தொகுப்பின் எளிமையும் செளந்தர்யமும் கூடிய மொழி, தமிழ்க் கவிதை வெளியில் புதிய வசீகரத்தை உருவாக்கியது. ‘இடமும் இருப்பும்’, ‘நீராலானது’ ஆகிய அவரது தொகுப்புகளால் தமிழ் நவீனக் கவிதையின் வாசகப் பரப்பு விரிவுகொண்டது. ஃபேஸ்புக்கில் அவர் தொடர்ந்து எழுதிவரும் கவிதைகள் மிகப் பெரிய வாசகப் பரப்பில் தொடர்ந்து கவனம் பெற்றுவருகிறது.
தமிழ்க் கவிதை உலகில் மனுஷ்யபுத்திரனுக்கு இது நாற்பதாம் ஆண்டு. இந்த ஆண்டில் அவரது 50ஆவது கவிதைத் தொகுப்பான ‘உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?’ வெளிவரவிருக்கிறது. சென்ற ஆண்டு அவர் எழுதிய 1,458 கவிதைகளின் தொகுப்பு இது. 1,768 பக்கங்களில் பெருந்தொகுப்பாக வெளிவரவுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்வு நாளை (7.1.2023) மாலை 3.30 மணிக்கு சென்னைப் புத்தகக் காட்சி சிந்தனை அரங்கில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 90032 18208.
விளக்கு விருது விழா: அமெரிக்காவைச் சேர்ந்த விளக்கு இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் நினைவு விருதுகளை வழங்கிவருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான விருது, எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்விக்கும் ஆய்வறிஞர் பொ.வேல்சாமிக்கும் அறிவிக்கப்பட்டது.
அதற்கான விழா இன்று (06.01.24) மாலை 5.30 மணி அளவில் சென்னை சி.ஐ.டி. காலனி கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. விளக்கு அமைப்புச் செயலாளர் மு.சுந்தரமூர்த்தி விருது வழங்கி விருதாளர்களைக் கெளரவிக்க இருக்கிறார். விருதாளர்கள் குறித்து அசதா, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், இரா.காமராசு, காளிங்கன், கடற்கரய் மத்தவிலாச அங்கதம், யுகபாரதி ஆகியோர் பேசவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago