கவனம் பெற்ற நூல்கள் @ 2023

By செய்திப்பிரிவு

புத்தகங்களுடன் புத்தாண்டு! - ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம், எம்ரால்டு, எதிர் வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ் ஆகிய பதிப்பகங்கள் நிகழ்ச்சிகளையும் புத்தகக் காட்சிகளையும் அவற்றின் விற்பனை மையங்களில் ஒருங்கிணைத்துள்ளன.

புனைவுகள்

பேரழகி
கண்மணி குணசேகரன்

தமிழினி
தொடர்புக்கு: 86672 55103

நடுநாட்டு மக்களின் வாழ்க்கையை அவர்களின் காத்திரமான மொழியில் சொல்லும் நூல் இது. கண்மணி குணசேசரனின் இந்த நாவலில் எளிய மனிதர்களின் நம்பிக்கைகளும் வாழ்க்கைப்பாடுகளும் திடகாத்திரமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

திருநீறு சாமி
இமையம்

க்ரியா
தொடர்புக்கு: 7299905950

மிகவும் அறிவியல்பூர்வ மாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களின் தொன்ம மனம் படுத்தும் பாட்டை இதன் ஒரு கதை பேசுகிறது. சமகால வாழ்க்கையின் நெருக்கடிகளை அவர்களின் பார்வையில் சொல்லியிருக்கும் திடமிக்க கதைகள் இவை.

காக்கம் பொன்
குமார செல்வா

டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்புக்கு: 99404 46650

விளவங்கோடு வட்டார வழக்கின் மூர்க்கத்துடன் வெளிப்படும் கதைகள் இவை. துன்பத்தைப் புகார் இன்றி ஏற்ற இயல்பான மனிதர்களை குமார செல்வா தனது இந்தக் கதைகளில் சித்தரிக்கிறார்.

சோளாம் என்கிற பேத்தி
கி.கண்ணன்

யாவரும்
தொடர்புக்கு: 99400 21472

சென்னைப் புறநகரான போரூருக்கு அருகில் உள்ள சிறு கிராமத்தின் 70களின் கதைதான் இது. இந்தப் பின்னணியின் துணிச்சலான யதார்த்தத்தை மக்கள் மொழியில் இந்த நாவல் பேசுகிறது.

பற் சக்கரம்
எஸ்.தேவி

எழுத்து பிரசுரம்
தொடர்புக்கு: 89250 61999

ஒருகாலக் கட்டத்தில் புழக்கத்திலிருந்த சுமங்கலித் திட்டம், பெண்ணடிமைப் பணித் திட்டத்தின் உண்மை முகத்தை இயல்பான கதாபாத்திரங்கள் வழி துலங்கச் செய்கிறது இந்த நாவல். பெண்களின் தனித்த உலகத்தையும் இதில் எஸ்.தேவி தன் எளிய மொழியால் திறந்து காண்பிக்கிறார்.

ஆக்டோபஸின் காதல்
வெய்யில்

கொம்பு
தொடர்புக்கு: 99523 26742

காதலின் மூர்க்கம், கவிதைக்குள் சொற்களால் முடுக்கிவிடப்பட்ட காத்திரமிக்க தொகுப்பு இது. இருந்தும் இல்லாமல் இருக்கும் ஒரு இசக்கிக்காக எழுதப்பட்ட பக்தன் ஒருவனின் பாசுரங்கள் இவை.

கடவுள் பிசாசு நிலம்
அகரமுதல்வன்

விகடன்
தொடர்புக்கு: 044-66076407

ஈழ நிலத்தைத் மனத் தொன்மங்களால் துழாவும் நினைவுப் பதிவு இது. போர்கொண்ட ஒரு நிலத்தை, அதன் பண்பாட்டை, மனிதர்களை, வாஞ்சையுடன் தழுவிச் சொல்லும் ஈரம்மிக்க படைப்பு.

மிஸ் யூ
மனுஷ்யபுத்திரன்

உயிர்மை
தொடர்புக்கு: 044 - 48586727

நவீன கவிதையின் சகல சாத்தியங்களையும் கைக்கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் இவை. இந்த நூற்றாண்டின் பரபரப்புக்கு இடையே எளிமையையும் செளந்தர்யத்தையும் சூடிக்கொண்ட நவ கவிதைகள்.

கழுமரம்
முத்துராசா குமார்

சால்ட்
தொடர்புக்கு: 93630 07457

நாட்டார் வழக்காற்றியல் அம்சங்களுக்கும் அதனுடன் இணைந்த பால்ய கால வாழ்க்கை நினைவுகளுக்கும் கவிதை முகம் கொடுத்துள்ள கவிதைகள் இவை. பொருளைச் சொல்வதில் துணிவும் நவீனமும் இந்தக் கவிதைகளின் விசேஷமான அம்சங்கள்.

திருவாழி
மீரான் மைதீன்

காலச்சுவடு
தொடர்புக்கு: 04652 278525

ஒரு வணிக வளாகத்தை, அதன் மனிதர்களின் வரலாற்றைச் சொல்லும் நாவல் இது. தனித்த வட்டார வழக்கும் சமூக நம்பிக்கைகள் மனித வாழ்க்கையில் நிகழ்த்தும் குறுக்கீடும் இந்த நாவலின் விசேஷமான அம்சங்கள்.

கட்டுரைகள்

தென்புலத்து மன்பதை
தொ.ப-வின் கட்டுரைகளும்

நேர்காணல்களும் தொகுப்பாசிரியர்: ஏ.சண்முகானந்தம் உயிர் பதிப்பகம்
தொடர்புக்கு: 98403 64783

தமிழ்ப் பண்பாட்டு வரலாறு குறித்த ஒரு கவனத்தைத் தமிழ்ப் பரப்பில் உருவாக்கியவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் நேர்காணல்களும் அதற்குச் சாட்சியம் கூறுகின்றன.

சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்: ஒரு தோற்றப்பாட்டியல் வாசிப்பு
எதிர் வெளியீடு
தொடர்புக்கு: 04259 226012

காந்தி, அம்பேத்கர் போன்ற ஆளுமைகள் குறித்தும் ‘ஹேராம்’, ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்கள், நாவல்கள், மொழிபெயர்ப்பு ஆகிய வெவ்வேறு துறைகள் சார்ந்தும் காத்திரமான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

பழங்குறியீடுகள் கலைக்களஞ்சியம்
சு.சிவா

காலச்சுவடு
தொடர்புக்கு: 04652 278525

கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட குறியீடுகளுக்கான தமிழ், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த விதத்தில் கல்வெட்டியலில் முக்கியமான நூல் இது.

ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை
ஆர்.பாலகிருஷ்ணன்

ரோஜா முத்தையா நூலகம்
தொடர்புக்கு: 044 2254 2551

பழந்தமிழ், சிந்துவெளிப் பண்பாடுகளுக்கு இடையேயான ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டும் நூல் இது. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடக் கருதுகோளுக்குச் சங்க இலக்கியங்களை உதாரணம் சொல்கிறது இந்நூல்.

தமிழ்நாட்டு வரலாறு பாதைகளும் பார்வைகளும்
கா.அ.மணிக்குமார்

பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு: 044 24332924

சமூக வன்முறைகள் எனப் பெயர் சூட்டப் பெற்ற மக்கள் போராட்டங்கள், பொருளாதார, பண்பாட்டுப் பரப்பில் ஏற்படுத்திய மாற்றங்களை மணிக்குமார் இந்த நூலில் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டு வரலாற்றையும் அறியப்படாத கோணத்தில் ஆராய்கிறார்.

மார்க்ஸியக் கலைச்சொற்கள்
எஸ்.வி.ராஜதுரை

நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
தொடர்புக்கு: 044 26251968

மார்க்சிய அறிஞரான எஸ்.வி.ராஜதுரையின் ஒரு தமிழ்க் கொடை இந்த நூல். மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அறியப்படாத எழுத்துகள், நண்பர்கள், பகைவர்கள், நிகழ்வுகள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு இது.

இயற்கை 24X7
நக்கீரன்

காடோடி
தொடர்புக்கு: 80727 30977

தமிழின் கவனம்பெற்ற எழுத்தாளர் நக்கீரன். பெரிய அறிவியல் உண்மைகளை எளிய சொற்களில் இந்த நூலில் கவனப்படுத்தியுள்ளார். அவர் கைக்கொண்டுள்ள மொழிநடையும் இந்தக் கட்டுரைகளுக்குக் கூடுதல் அழகு.

பனை எழுக
காட்சன் சாமுவேல்

தன்னறம் நூல்வெளி
தொடர்புக்கு: 98438 70059

நம் நிலத்தின் மரமான பனையின் மீதான தீராக் காதலை வெளிப்படுத்தும் நூல் இது. நாம் அறியாத பனை அறிவியலை இந்த நூல் வழி காட்சன் சாமுவேல் வாசகர்களுக்குத் துலங்கச் செய்கிறார்.

சக்கிலியர் வரலாறு
ம.மதிவண்ணன்

கருப்புப் பிரதிகள்
தொடர்புக்கு: 94442 72500

இதுவரை எழுதப்பட்ட வரலாற்றில் உள்ள விடுபடுதல்களை இந்நூலில் ம.மதிவண்ணன் சுட்டிக்காட்டுகிறார். வலுவான சான்றுகளின் அடிப்படையில் அருந்ததியர் வரலாற்றை இந்த நூல் முன்வைக்கிறது.

உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு சரியா? தவறா?
தொகுப்பாசிரியர்: சு.விஜயபாஸ்கர்

நிகர்மொழி பதிப்பகம்
தொடர்புக்கு: 8428 455 455

பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கான இடஒதுக்கீட்டின் தீங்குகளை விளக்கும் கட்டுரைகளும் அரசியல் தலைவர்களின் அறிக்கைகளும் இடம்பெற்றுள்ள நூல் இது.

மொழிபெயர்ப்புகள்

கலைஞர் மு.கருணாநிதி வரலாறு
ஏ.எஸ்.பன்னீர்செல்வன் (தமிழில்: சந்தியா நடராஜன்)

வ.உ.சி. நூலகம்
தொடர்புக்கு: 98404 44841

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் கருணாநிதியுடன் நிகழ்த்திய உரையாடல்கள் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். திமுக - அதிமுக இணைப்பு முயற்சி என்பது போன்ற அரிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

கேரள பழங்குடிக் கவிதைகள்
தேர்வும் தொகுப்பும்: நிர்மால்யா

தன்னறம் நூல்வெளி
தொடர்புக்கு: 98438 70059

கேரளத்தைச் சேர்ந்த 18 பழங்குடிக் கவிஞர்களின் கவிதைகள் இவை. இக்கவிதைகளில் மொழியப்பட்டுள்ள சொற்கள் வழி தமிழ்-மலையாளம் இரு பண்பாட்டுக்குமான பிணைப்பை அறிந்துகொள்ள முடிகிறது

குழந்தைகளுக்கான பொருளாதாரம்
ரங்கநாயகம்மா (தமிழில்: கொற்றவை)

டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்புக்கு: 9940446650

எளிய மொழியில் பொருளாதாரம் குறித்து விளக்குகிறது இந்த நூல். பணம், உபரி மதிப்பு போன்ற சொற்களை மார்க்சியப் பின்னணியில் புரியவைக்கிறார் ரங்கநாயகம்மா.

பரிணாமத்தின் ஊடாக வாழ்க்கையின் விளக்கம்
புரோசாந்தா சக்கரவர்த்தி

(தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி)
மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்

உயிரினங்களுக்கு இடையில் பன்முகத்தன்மை தோன்றியதை அறியப்பண்ணுகிறது இந்த நூல். இந்த அறிவால் நடைமுறையில் நமக்குக் கிட்டும் பலன் என்ன என்பதையும் விளக்குகிறது.

பறந்துபோய் விட்டான்
எட்கர் கீரத்

(தமிழில்: செங்கதிர்)
நூல் வனம்
தொடர்புக்கு: 9176549991

நவீன வாழ்க்கையின் விசித்திரமான பிரச்சினைகளைச் சித்தரிக்கும் கதைகள் இவை. நிகழ்வுக்கும் நிகழாமைக்கும் இடையிலான கணத்தைத் திறக்கும் மொழி இந்தத் தொகுப்பின் விஷேசமான அம்சம்.

என்றென்றும் தாரா
கமலதாஸ்

(தமிழில்: நிர்மால்யா)
வம்சி
தொடர்புக்கு: 94458 70995

புகழ்பெற்ற மலையாள/ஆங்கில எழுத்தாளர் கமலாதாஸ் கதைகளின் தொகுப்பு இது. கவித்துவம் கூடிய அவரது நடையை இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் வாசித்துணரலாம்.

ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் (நாடகம்)
அந்தோனின் ஆர்த்தோ

(தமிழில்: சாரு நிவேதிதா)
எழுத்து பிரசுரம்
தொடர்புக்கு: 8925061999

பிரெஞ்சு நாடக ஆளுமையான அந்தோனின் ஆர்த்தோவின் நூலின் மொழிபெயர்ப்பு இது. சர்சியலிச நாடக இயக்கத்தைச் சேர்ந்தவர் இவர். இந்த நாடகம் அதற்குச் சாட்சி.

ஃபாசிசத்தின் இலக்கணம்: நாம் - அவர்கள் - ஜேசன் ஸ்டான்லி
(தமிழில்: வி.நட்ராஜ்)

தடாகம் வெளியீடு
தொடர்புக்கு: 89399 67179

பாசிசத்தால் ஜனநாயக சமூகங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை இந்த நூல் ஆராய்கிறது. புகழ்பெற்ற அறிஞராகவும் ஜேசன் ஸ்டான்லி இதை இந்நூலில் அணுகியுள்ளார்.

அரக்கர்: வி.பி. சிங் வாழ்க்கை வரலாறு
தேபாஷிஷ் முகர்ஜி
(தமிழில்: க. சிவஞானம்)

ஆழி பதிப்பகம்
தொடர்புக்கு: 97150 89690

இந்தியா கண்ட முக்கியான பிதரமர் வி.பி.சிங். பலத்த எதிர்ப்புகளைத் தாண்டி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் மண்டல் கமிசன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியவர் இவர். இவரது வாழ்க்கை வரலாற்று நூல் இது.

தாவோ தெ ஜிங்
லாவோ ட்சு

(தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி)
தமிழ்வெளி
தொடர்புக்கு: 9094005600

ஒரு பழமையான சீன மெய்யியல் நூலாகும். அதன் தமிழ்ப் பதிப்பான இந்நூல் கவித்துவம் மிகுந்த நடடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

24 days ago

இலக்கியம்

24 days ago

மேலும்