ஓவியங்களின் கடலில் பொன்னியின் செல்வன்!

By வெ.சந்திரமோகன்

மிழ் வாசகப் பரப்பில் செல்வாக்கு மிக்க படைப்பான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ இந்தப் புத்தகக்காட்சிக்கு இன்னொரு புதிய பரிணாமத்தில் வெளிவருகிறது. கல்கியின் புகழ்பெற்ற இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்றுவருகின்றனர். எம்.ஜி.ஆர். தொடங்கி மணிரத்னம் வரை பலரும் அதை சினிமாவாக்க முயன்று பின்வாங்கினர். சிலர் அதை நாடகமாக்கினர். புத்தகமாகக் கொண்டுவருகையில், கல்கி அந்நாட்களில் எழுதியபோது வெளியான மணியனின் ஓவியங்களுடன் புத்தகமாகக் கொண்டுவந்து பார்த்தனர். சிலர் காமிக்ஸ் வடிவில் அதைக் கொண்டுவந்தனர். இந்த முயற்சிகளின் தொடர்ச்சியில் ஒன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களுடன் அந்த நாவலைக் கொண்டுவரும் முயற்சி. ஓவியர் பத்மவாசனின் செறிவான ஓவியங்களுடன் 1,220 வண்ண ஓவியங்கள், நூற்றுக்கணக்கில் கருப்பு வெள்ளை ஓவியங்களுடன் ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது ‘சிக்ஸ்த் சென்ஸ்’ பதிப்பகம். இந்தப் புத்தகக்காட்சிக்கு வரும் புத்தகங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் புத்தகம் இதுதான். புத்தகத்தைப் பதிப்பித்திருக்கும் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ பதிப்பக நிறுவனர் புகழேந்தியிடம் பேசினேன்.

எப்படி இந்தத் திட்டத்தில் இறங்கினீர்கள்?

கல்கியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டவை என்பதால் அவரது ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படைப்புகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. எனினும், கற்பனைகளைப் பறக்கவிடும் அந்த நாவலை ஏன் ஏராளமான வண்ண ஓவியங்களுடன் தரமான தாளில் தயாரித்து வெளியிடக் கூடாது என்று நான் நினைத்தேன். பத்மவாசனின் ஒத்துழைப்புடன் இந்தப் புத்தகம் தயாரானது அப்படித்தான்.

என்னென்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்?

மெகா பட்ஜெட் படம்போல மெகா பட்ஜெட் புத்தகம் இது. ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாகச் செலவுசெய்து இதை உருவாக்கியிருக்கிறோம். கிட்டத்தட்ட ஒரு திரைப்படத் தயாரிப்பு அளவுக்கு இதில் உழைப்பைப் போட வேண்டிவந்தது. நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன.

ஓவியர் பத்மவாசனின் பங்களிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்…

2000-களின் தொடக்கத்தில் பத்மவாசனின் ஓவியங்களுடன் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ‘கல்கி’ இதழ் வெளியிட்டது. இந்நாவலைத் தங்கள் தூரிகைகளால் உயிர்ப்பான காட்சி வடிவங்களுடன் உருவாக்கியவர்கள் ஓவியர் மணியமும் ஓவியர் வினுவும். அவர்கள் வழியில் அற்புதமான ஓவியங்களைப் படைக்கிறார் பத்மவாசன். ‘கல்கி’ இதழுக்காக வரைந்த ஓவியங்களுடன் மேலும் பல ஓவியங்களையும் இந்தப் புத்தகத்துக்காக அவர் வரைந்து தந்திருக்கிறார்.

வேறு என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன?

‘பொன்னியின் செல்வன்’ நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களைத் தேடிச் சென்று பார்க்கும் தீவிர வாசகர்கள் உண்டு. அவர்களுக்குப் பயன்படும் விதத்தில், கதை நடந்தபோது இருந்த இடங்களின் வரைபடங்களை இணைத்திருக்கிறோம். வாசிப்பின் ஓட்டத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஆசிரியர் கல்கி பற்றியும், கதை தொடர்புள்ள தகவல்கள் பற்றியும் அடிக்குறிப்புகள் தந்திருக்கிறோம்.

எல்லாம் சரி, விலை எவ்வளவு? சலுகைகள் எதுவும் உண்டா?

மொத்தம் 2,440 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 3,333. புத்தகக்காட்சியில் ரூ.2,500-க்கு இதை விற்கவிருக்கிறோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

7 hours ago

இலக்கியம்

7 hours ago

இலக்கியம்

7 hours ago

இலக்கியம்

7 hours ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

21 days ago

மேலும்