நூல் நயம்: அசல் மனிதர்களின் கதை

By செய்திப்பிரிவு

கா.ரபீக் ராஜாவின் ‘ஐஸ் பிரியாணி' சிறுகதைத் தொகுப்பின் கதைமாந்தர்கள் நாம் பார்க்கும், பழகும், நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள்தாம். அதனால் கதைகளுடன் எளிதாக ஒன்றிணைய முடிகிறது. நிலப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு சில காரியங்களைச் செய்துகொடுப்பவராக இருந்தாலும், தன் மருமகனின் உறவினர்களுக்குச் செய்யும்போது அலுத்துக்கொள்கிறார். அந்தக் காரியங்களுக்கு அவரால் லஞ்சமும் வாங்க முடிவதில்லை. வேலைக்கே உலை வைக்கக்கூடிய ஆபத்து நிறைந்ததாகவும் இந்தப் பணி இருக்கிறது.

மகளின் வாழ்க்கையை நினைத்து அனைத்தையும் செய்யும் அவரைப் பற்றிய கதை நேர்த்தியாக இருக்கிறது. வீடற்ற ஒரு ஜோடி, தனிமையைத் தேடிச் செல்லும் கதையில், அந்த வாழ்க்கையிலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டியிருக்கிறது. ஒரு துண்டு நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள், அந்த நிலத்துக்காகப் படும்பாட்டை ‘ஊருக்கு அப்பால்’ கதை அழுத்தமாகச் சொல்கிறது. பெரிய திருப்பமோ அதிர்ச்சியோ இல்லாத முடிவுகளாக இருந்தாலும் கா.ரபீக் ராஜாவின் எழுத்து, கதைகளை வேகமாக வாசிக்க வைப்பதோடு, சில நாள்களுக்கு நம் நினைவில் தங்கிவிடவும் வைத்துவிடுகிறது. - எஸ்.சுஜாதா

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE