புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் கன்னடத்தில் எழுதிய நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘மாதையா தி காப்ளர்’. பிரசன்னா ராமசுவாமி இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸ் நாடகக் குழுவினரால் இந்த நாடகம் சென்னை அருங்காட்சியகத்தின் நாடக அரங்கில் நவம்பர் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் அரங்கேற்றப்படுகிறது.
அழிக்கப்பட்ட மலைகளும் நதிகளும் பழங்குடிகளும் மனித உருவில் நகரில் அலைகிறார்கள். சிவனின் அவதாரம் என்று நம்பப்படும் மாதையா என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளியைச் சந்திக்கிறார்கள். சந்திரனையும் சூரியனையும் சிறைப்படுத்திவிட்டு அன்னை பூமியையும் தனக்கு அடிமைப்படுத்தும் முயற்சியில் இருக்கும் வங்கபுரியின் கொடிய அரசன் சமனாவை மாதையாவின் உதவியுடன் அழித்து இயற்கையைக் காக்க முயல்கிறார்கள். சமனாவை அவனது அரண்மனையில் சந்திக்கும் மாதையாவிடம் தனக்கு ஏதாவது பரிசளித்தால் அவரை விட்டுவிடுவதாகச் சொல்கிறான் சமனா. உலகில் யாரிடமும் இல்லாத மனிதத் தோலால் ஆன காலணியை சமனாவுக்குப் பரிசளிப்பதாகச் சொல்லிவிட்டு அதைத் தேடி மனித உருவில் இருக்கும் மலைகள், நதிகளாகிய குட்டர்களோடு புறப்படுகிறார் மாதையா. அந்தக் காலணி கிடைத்ததா? கிடைத்த பின் என்ன ஆனது என்பதே மீதிக் கதை.
நாம் அனைவருமே ஏதோ ஒருவகையில் இயற்கையைச் சுரண்டுகிறோம். சுரண்டப்படும் இயற்கையின் அங்கங்களையும் கடவுள்களையும் மனிதர்களாகவும் லாப நோக்கில் இயற்கை வளங்களைத் தங்க ளது ஆளுகைக்கு உட்படுத்தத் துடிக்கும் மனிதர்களைக் கொடிய அரசனாகவும் இந்த நாடகம் உருவகப்படுத்துகிறது. தெரிந்தும் தெரியாமலும் இயற்கை சீரழிவுக் குத் தாங்களும் காரணமாக இருப்பது குறித்துப் பார்வையாளர்களை ஆழ்ந்த பரிசீலனைக்கு உள்ளாக்குகிறது நாடகம்.
சிவனைப் பற்றிய பக்திப் பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த நாடகத்தில், பக்தி நம் உலகியல் தேவைகளைக் கேட்டுப் பெறுவதற்கான கருவியாகவும் கோயில்களும் மடங்களும் லாபம் ஈட்டும் கூடாரங்களாக மாறிவிட்டதும், பல பிரிவினர்கள் கோயில்களைத் தங்கள் தனிச் சொத்தாக பாவிப்பதால் விளையும் சர்ச்சைகளும் சண்டைகளும் பகடியாக உணர்த்தப்பட்டிருக் கின்றன.
வெறும் வசனத் தோரணங்களாக இல்லாமல் நவீன நாடகத்தின் பல கூறுகளோடு ஆடல், பாடல் ஆகியவற்றையும் உள்ளடக்கி சிறந்த காட்சி அனுபவத்தைத் தந்திருக்கிறது பிரசன்னா ராமசுவாமியின் இயக்கம். நடிகர்கள் அனைவரும் வசனங் கள், முகபாவங்களைத் தாண்டி, மொத்த உடலையும் நடிப்புக்கான கருவியாகப் பயன்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்கு உரியது.
நடிகர்கள் அனைவருமே சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள். மாதையாவாக நடித்திருக்கும் சர்வேஷ் ஸ்ரீதர் நெடிய வசனங்களை மூச்சுவிடாமல் பேசும் இடங்களில் வியக்கவைக்கிறார். சமனாவாக நடித்திருக்கும் நிகில் கேடியா அனைத்து வசனங்களையும் மிகையுணர்ச்சியுடனேயே பேசுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இப்படியொரு கருப்பொருள் கொண்ட நாடகத்துக்கான பின்னணி இசைக்கு கிட்டாரைப் அதிகமாகப் பயன்படுத்திஇருப்பது புதுமையான அனுபவம்.
இந்த நாடகம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேற்றப்பட்டால் நாடகம் சொல்லும் கருத்துகளும் சிறப்பான நாடக அனுபவமும் இன்னும் பலரைச் சென்று அடையும்!
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago