நூல் வரிசை: வரலாற்றில் கல்வெட்டுக்கள்

By செய்திப்பிரிவு

வரலாற்றில் கல்வெட்டுக்கள்
முனைவர் ப.பாலசுப்பிரமணியன்

சங்கர் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044 26502086

வரலாறு நமக்குத் துலக்கமாவதற்குப் பெரும் ஆதாரமாக இருக்கும் கல்வெட்டுகளைக் கையாள்வதில் இருக்கும் அலட்சியத்தை உணர்த்தி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூல்.

அரிமதி தென்னகனாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
தொகுப்பாசிரியர்: புதுவை யுகபாரதி

சாகித்திய அகாடமி வெளியீடு
விலை: ரூ.220
தொடர்புக்கு: 044 24311741

தனிப் பாக்கள், குறுங்காவியம், சிறுவர் பாக்கள், இசைப் பாடல்கள் எனப் பல வகையில் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த அரிமதி தென்னகனாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது.

கம்பதாசன் கதைகள்
கவிஞர் கம்பதாசன்

முல்லை பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9840358301

திரைப்படப் பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட கம்பதாசன் குறிப்பிடத்தகுந்த கதைகளும் எழுதியுள்ளார். கம்பதாசன், கலைஞனின் சுதந்திரத்துடன் வாழ்ந்தவர். அந்தக் கலை வாழ்வைச் சித்திரிக்கும் கதைகள் இவை
எனலாம்.

அன்பின் நெடுங்குருதி
கார்த்திகேயன் மாகா

யாப்பு வெளியீடு
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9080514506

காதலை, காமத்தை, குழந்தைமையை எனப் பல பாடுபொருள்கள் கொண்ட கவிதைகள் இவை. சமூக ஊடகப் பிரபலம் ஜி.பி.முத்துவுக்கும்கூட இந்தக் கவிதைத் தொகுப்பில் ஓர் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்க்சின் இலக்கிய மனம்
துரை.சண்முகம்

கீழடி பதிப்பகம்
விலை: ரூ.40
தொடர்புக்கு: 9176587245

கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூலை தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பால்சாக்கின் கதையை வாசித்தது, ஜென்னிக்கு அவர் எழுதிய கவிதை என அவருடைய இலக்கிய ஈடுபாட்டை இந்நூல் வெளிப்படுத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE