மாணவர்கள் சொந்த பாணியில் கிரிக்கெட் விளையாட வேண்டும் : சடகோபன் ரமேஷ் அறிவுரை

By செய்திப்பிரிவு

மதுரை: ‘தோனியாக வேண்டும், கோலியாக வேண்டும் என்று நினைக்காதீர்கள், மாணவர்கள் தங்களது சொந்த பாணியில் கிரிக்கெட் விளையாட வேண்டும்,’ என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அறிவுறுத்தினார்.

வேலம்மாள் பள்ளியில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 180 மாண வர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்த சடகோபன் ரமேஷ், மாணவர்களுக்கு கிரிக்கெட் பற்றிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது: கிரிக்கெட்டில் உங்களுக் கென்று தனி பாணியை உருவாக் குங்கள். சச்சினை பார்த்து தோனி விளையாடவில்லை. தோனியை பார்த்து கோலி விளை யாடவில்லை. அவரவர் தனி பாணியை கையாண்டதால்தான் நிலைத்து நின்றார்கள். அதேபோல், உங்களுக்கென்று தனி முத்திரை பதியுங்கள் என்றார்.

மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், வேலம்மாள் கிரிக்கெட் அகாடமி சிறப்பு பயிற்சியாளர் சிவ சிதம்பரம் மற்றும் ரமேஷ் கார்த்திக் ஆகியோர், மாணவர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், வேலம்மாள் கல்வி குழும மூத்த முதல்வர் சுரேஷ்குமார் மற்றும் அனுப்பானடி வேலம்மாள் பள்ளி முதல்வர் பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE