ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் உள்ள ஒரு ரிசாட்டில் ரிஷப் போர்வால் என்பவருக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு நடுவே காலை 11 மணிக்கு பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. இதையடுத்து, மணமகன் ரிஷப் திருமண நிகழ்ச்சியை சிறிது நேரம் நிறுத்தி வைத்தார். பின்னர் அவரது வேண்டுகோளுக்கு இணங்க திருமண அரங்கில் எல்இடி திரை பொருத்தப்பட்டு, பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது. மோடியின் உரையை கேட்குமாறு விருந்தினர்களை ரிஷப் கேட்டுக்கொண்டார். மோடியின் உரை முடிந்த பிறகு திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.
இதுகுறித்து ரிஷப் கூறும்போது, “பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். அவருடைய மனதின் குரல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். ஒரு நிகழ்ச்சியைக்கூட தவறவிட்டது இல்லை. அவருடைய உரையிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். எனவே, அவருடைய 100-வது நிகழ்ச்சியை தவறவிடக்கூடாது என விரும்பி திருமணத்தை சிறிது நேரம் நிறுத்தி விட்டு கேட்டேன். என்னுடன் மனைவி, உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியை கேட்டனர். என்னுடைய முடிவால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
21 days ago