எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சாதனை பயணத்தில் நாளில் 3,440 மீட்டர் உயரத்தை அடைந்த தமிழக பெண்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி தனது குழுவினருடன் 3 நாட்களில் 3,440 மீட்டர் உயரத்தை கடந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன்- மூர்த்தியம்மாள் தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி (33). கடலூரில் படிப்பை முடித்த அவர், திருமணத்துக்குப் பின்புசென்னையில் கணவர் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.

தனியார் பள்ளியில் ஆசிரி யையாகவும், ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மலையேறுவதில் ஆர்வமுள்ள முத்தமிழ்ச்செல்வி, 2021-ம் ஆண்டில் 155 அடி உயர மலை உச்சியிலிருந்து கயிறு மூலம் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு 58 விநாடிகளில் இறங்கி சாதனை படைத்தார்.

அதைத்தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மலையின் 165 அடி உயரத்திலிருந்து கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு கயிறு மூலம் 55 விநாடிகளில் இறங்கிச் சாதனை புரிந்தார். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியை ஏப்.5-ம் தேதி தொடங்கினார். ஏப்.8-ம் தேதி 3,440 மீட்டர் உயரத்தைக் கடந்துள்ளார்.

இது தொடர்பாக முத்தமிழ்ச்செல்வி மொபைல் போனில் கூறியதாவது: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சிப்போர் மலையேறும் பயிற்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டும், அல்லது குறைந்தது 5,500 மீட்டர் உயரம் மலையேற்றம் செய்திருக்க வேண்டும். நான் மலையேறும் பயிற்சி படிக்காததால் லடாக்கில் உள்ள பனிமலையில் 6,496 மீட்டர் ஏறினேன். இதைத்தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தகுதி பெற்றேன்.

எவரெஸ்ட் மலையேற ரூ.45 லட்சம் வரை செலவாகும். எனது உறவினர்கள், நண்பர்கள், தன்னார்வ அமைப்புகள், தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதவியுடன் தேவையான நிதி திரட்டினேன். இதையடுத்து நேபாளம் சென்று ஏசியன் டிரெக்கிங் குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியை ஏப். 5-ல் தொடங்கினேன். 3 நாட்களில் 3,440 மீட்டர் உயரத்தில் உள்ள நாம்சிபஜார் என்ற இடத்தை கடந்துள்ளேன். எவரெஸ்ட் பயணத்தை முடிக்க 2 மாதங்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

1 month ago

மேலும்