ராமேசுவரம்: டெல்லியைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியையான மீனாட்சி பஹுஜா, தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 11 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்.
பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேசுவரம் தீவும், அதனைத் தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது.
தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் இதுவே ஆகும்.
பாக் ஜலசந்தி கடலை 26.02.2020 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த எடி ஹு (45) முதல் பெண்ணாகவும், 19.03.2021 அன்று தெலுங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி (48) முதல் இந்தியப் பெண்ணாகவும், மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதிலும் நீந்திக் கடந்துள்ளனர்.
மேலும் பெங்களுரைச் சேர்ந்த சுஜேத்தா தேப் பர்மன் (40) என்ற நீச்சல் வீராங்கணை கடந்த 16.03.2023 அன்று தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் நீந்தி சென்று மீண்டும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு பாக் ஜலசந்தி கடலை இருபுறமும் நீந்தி வந்த முதல் பெண்ணாக சாதனை படைத்துள்ளார்.
இதுதவிர 15 ஆண்கள் பாக் ஜலசந்தியை தனியாக நீந்தி கடந்துள்ளனர். மேலும் சிலர் குழுவாகவோ ரிலே மற்றும் மாரத்தான் முறையிலும் பாஜ் ஜலசந்தி கடலை நீந்தி கடந்தனர்.
இந்நிலையில், டெல்லி தனியார் கல்லூரி பேராசிரியரான மீனாட்சி பஹுஜா(45) என்ற நீச்சல் வீராங்கனை, இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடக்க இரு நாட்டு வெளியுறவு, பாதுகாப்பு துறைகளின் அனுமதி கோரினார்.
இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், கடந்த சனிக் கிழமை பிற்பகல் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 2 படகுகள் மூலம், மதுரை மாவட்ட நீச்சல் சங்க குழுவினருடன் தலைமன்னார் புறப்பட்டுச் சென்றார்.
சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தலைமன்னாரிலிருந்து நீந்த ஆரம்பித்த மீனாட்சி பஹுஜா ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனையை வந்தடைந்தார். சுமார் 30 கி.மீ. பாக் ஜலசந்தி கடற்பரப்பை 11 மணி நேரத்தில் நீந்திக் கடந்தார்.
தனுஷ்கோடியில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ், மதுரை மாவட்ட நீச்சல் சங்கச் செயலாளர் கண்ணன் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
1 month ago