புனே: தன் பாட்டி அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்ற நபரை துணிச்சலாக விரட்டி அடித்துள்ளார் 10 வயதான சிறுமி ஒருவர். இந்தச் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி வீடியோ இப்போது பரவலாக கவனம் பெற்றுள்ளது. பலரும் சிறுமியின் வீரதீர செயலை பாராட்டி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் நடந்துள்ளது. சம்பவத்தன்று 60 வயது பாட்டி ஒருவர் தனது இரண்டு பேரக்குழந்தைகளுடன் சாலையில் நடந்து வருகிறார். அப்போது ஸ்கூட்டரில் வரும் நபர் ஒருவர், அவரிடம் விலாசம் கேட்பது போல பேச்சு கொடுத்து நொடிப்பொழுதில் அவர் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயல்கிறார்.
அப்போது தன் பாட்டியை காக்கும் நோக்கில் கையில் இருந்த பையை கொண்டு அந்த நபரைத் தாக்குகிறார் பத்து வயதான அந்தச் சிறுமி. தனது முயற்சி தோல்வியை தழுவதை அறிந்த நபர், அங்கிருந்து ஸ்கூட்டரில் பறந்து செல்கிறார். அந்தச் சிறுமியுடன் 6 வயதான அவரது தங்கையும் அப்போது இருந்துள்ளார். சுமார் 26 நொடிகள் கொண்ட இந்த சிசிடிவி காட்சி அண்மையில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிவாஜி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். அந்தச் சிறுமியின் துணிச்சல் மிக்க வீரதீர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தச் சிறுமியின் பெயர் ருத்வி காக் என தெரியவந்துள்ளது. அவரது தந்தை வாகனப் பழுது நீக்கும் பணியை மேற்கொண்டு வருகிறாராம். சம்பவத்தன்று தங்கள் வீட்டில் இருந்து தனது அத்தை வீட்டுக்கு அந்தச் சிறுமி, பாட்டி உடன் சென்றுள்ளார்.
» தேவையற்ற குழுக்களை நீக்க வாட்ஸ்அப் பயனர்களுக்கு உதவும் புதிய அம்சம்: விரைவில் அறிமுகம்?
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
44 mins ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
27 days ago