சென்னையில் வரும் 8ம் தேதி மகளிர் தின கொண்டாட்டம் - எவ்வாறு கலந்து கொள்ளலாம்?

By செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கமும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மகளிர் அதிகாரம் அளிக்கும் மையமும் இணைந்து மகளிர் தின விழாவை கொண்டாட உள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்க தலைவி திருமதி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் மற்றும் மகளிர் அதிகாரம் அளிக்கும் மையம்(அண்ணா பல்கலைக்கழகம்) இணைந்து, சர்வதேச மகளிர் தினத்தன்று(மார்ச் 8) பெண்களுக்கான போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள், பட்டிமன்றம், கோலப்போட்டி, அடுப்பு இல்லாமல் சமைக்கும் சமையல் போட்டி, மாநில உடை அலங்கார போட்டி, பூக்கூடை அலங்காரம், காய்கறி அலங்காரம், தனி நடனம், ஜோடி நடனம், நேரடி போட்டிகள் என பலவிதமான போட்டிகளை நடத்தி, பெண்களை மகிழ்வித்து அவர்களது தனித் திறமைகளை வெளிக்கொண்டு வர இருக்கிறது.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம். மார்ச் எட்டாம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணிக்கு நிகழ்ச்சிகள் முடிவடையும். பெண்கள் உற்பத்தி செய்த பல வகையான உற்பத்திப் பொருட்கள், கிராமத்துப் பொருட்கள், சிறு தானிய வகைகள், அலங்கார நகைகள், எம்பிராய்டரி துணி வகைகள் போன்றவை இங்குள்ள விற்பனை கூடங்களில் மார்ச் 8 ,9,& 10 என மூன்று நாட்களிலும் விற்பனைக்கு வைக்கப்படும். இங்கு, அறுபதுக்கும் மேற்பட்ட விற்பனை கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. அதேநேரத்தில் முன்பதிவு செய்வது அவசியம். 8056298790, 9884991232 ஆகிய எண்களுக்கு குறுந்தகவல் மட்டுமே அனுப்பி பதிவு செய்துகொள்ளலாம். சிறந்த தொழில் முனைவோர் விருது, சிறந்த சமூக நல விருது ஆகியவை விழாவில் வழங்கப்பட உள்ளன. இத்துடன் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கத்தின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள தொழில் மலரான இ - புத்தகத்தை வெளியிட உள்ளோம். மத்திய - மாநில அரசு திட்டங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான அனைத்து தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சிறப்பாக தொழில் முனையும் தகவல்களைப் பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்