நவராத்திரி முதல் அன்பே வா வரை: தியேட்டரில் பார்த்த 470 படங்களை பட்டியலிட்ட தாத்தா - பேரனின் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தீவிர சினிமா ரசிகர் ஒருவர் தான் திரையரங்குகளில் பார்த்த படங்களை நாள், படத்தின் பெயர், கொட்டகை, மொழி, நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு நோட்டு புத்தகத்தில் தன் கைப்பட எழுதி வைத்துள்ளார். அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அந்த பலே சினிமா ரசிகரின் பேரன். இப்போது அது பரவலாக நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

இணைய வெளியில் தினந்தோறும் கோடி கணக்கான பதிவுகள் பதிவு செய்யப்படுகிறது. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த பதிவுகளில் ஒன்றாக இணைந்துள்ளது இந்த பதிவு.

அக்ஷய் என அறியப்படும் ட்விட்டர் பயனர் ஒருவர் இதனை படங்களுடன் ட்வீட் செய்துள்ளார். “நீண்ட நாட்களுக்கு முன்பு எனது தாத்தா, அவர் பார்த்த திரைப்படங்களைப் பதிவு செய்ய ஒரு நோட்டுபுத்தகத்தை வைத்திருந்துள்ளார். இது அவர் உருவாக்கிய அவரது சொந்த Letterboxd என்றும் சொல்லலாம். அதன் மூலம் அவர் ஹிட்ச்காக் மற்றும் ஜேம்ஸ்பாண்ட் படங்களை திரையரங்குகளில் பார்த்துள்ளார் என்பது அறிந்து கொண்ட போது எனக்கு அது வியப்பை கொடுத்தது.

அதேபோல அன்பே வா படத்தையும் அவர் பார்த்துள்ளார். அதோடு அந்த படம் ‘கம் செப்டம்பர்’ என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். அதையும் அவர் திரையரங்கில் பார்த்துள்ளார்” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அதுதான் இப்போது வைரல் ஆகியுள்ளது. பலரும் இது குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 1958 முதல் 1974 வரையில் வெளியான படங்கள் குறித்த விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

மேலும்