சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்பு - விருதுநகர் விவசாயி தேசிய விருதுக்கு தேர்வு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: சிறுதானியத்தில் மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரித்து வரும் விருது நகரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அளிக்கப்படும் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசு இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறி வித்துள்ளது. தமிழகத்தில் சிறு தானிய உற்பத்தியில் விருதுநகர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. கம்பு, சோளம், தினை, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டியைச் சேர்ந்த சிவக் குமார் இயற்கை விவசாயம் மூலம் சிறுதானியங்களை உற் பத்தி செய்வதோடு அதில் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி தயாரித்து வருகிறார். சிறுதானிய சத்துமாவுடன் பருப்பு வகைகள், மூலிகைகள், ஸ்பைருலினா போன்றவற்றை கலந்து விற்பனை செய்கிறார்.

மதிப்புக் கூட்டப்பட்ட ரொட்டி வகைகள், அவல் மிக்சர், சிறு தானிய கூழ், சிறுதானிய லட்டு போன்றவற்றை தயாரித்து சந் தைப்படுத்தி வருகிறார். அதோடு, சாமை சைவ பிரியாணி, வரகு புளியோதரை, பனிவரகு சாதம், தினை தேங்காய் சாதம், குதிரை வாலி தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தனியார் மற்றும் அரசு விழாக்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் சிவக்குமாருக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரித்ததற்கான புத்தாக்க விருதை அறிவித் துள்ளது. தமிழகத்தில் சிவக்குமார் ஒருவருக்கு மட்டுமே இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2 முதல் 4-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் ‘புஷா கிரிஷி விக்யான் மேளா’வில் பங்கேற்க சிவக்குமாருக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்விழாவின் நிறைவு நாளான மார்ச் 4-ம் தேதி சிவக்குமாருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

இது குறித்து விவசாயி சிவக்குமார் கூறியதாவது: துரித உணவுகளை விரும்பும் இளைய தலைமுறையினர் சிறுதானியங்களை மறந்து வருகின்றனர். இளைய தலைமுறையினர் விரும்பி உண்ணும் வகையில் சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டப் பட்ட குக்கீஸ் மற்றும் ஸ்னாக்ஸ், வெற்றிலை ஜூஸ் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கிறேன்.

இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பலர் தங்களது இல்ல விழாக் களுக்கு சிறுதானிய உணவு வகைகளை தயாரித்து தருமாறு ஆர்டர் கொடுக் கின்றனர். அரசு விழாக்களுக்கும் சிறுதானிய உணவு தயாரித்து கொடுக்கிறோம். தமிழக வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரையின் பேரில் இவ்விருதுக்கு நான் தேர்வாகியுள்ளேன். இது எனக்கு பெருமை யாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

32 mins ago

வாழ்வியல்

16 hours ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்