எல்லை இல்லா அன்பு | இங்கிலாந்து பெண்ணுக்கு பூ சூடிய மதுரை பெண்மணி - வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

மதுரை: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான அலெக்ஸ் ஆத்வெய்ட்-க்கு, மதுரையில் பூ விற்கும் பெண்மணி பூ வைத்துவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த அலெக்ஸ் ஆத்வெய்ட், தமிழகத்தின் கடற்கரை, மலைகள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வீடியோ பதிவு செய்து அதனை தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவர் மதுரை வந்தபோது, அவருக்கு அங்கு பூ விற்கும் பெண்மணி ஒருவர் ஆசையாக பூ வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரையில் சந்தைப் பகுதி ஒன்றில் பழக்கடைகளுக்கு மத்தியில் பூ கூடையுடன் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர், வெளிநாட்டு பெண்ணான அலெக்ஸ் ஆத்வெய்ட்டிடம் பூ வைத்துக்கொள்ளுமாறு கேட்கிறார். அதோடு, பூ வைத்தால் எப்படி இருக்கும் என்பது குறித்தும் விளக்குகிறார். இதைக் கேட்டு பூ வைத்துக்கொள்ள அலெக்ஸ் ஆத்வெய்ட்டும் சம்மதிக்கிறார்.

இதையடுத்து, வெளிநாட்டு பெண்ணுக்கு மதுரை தமிழச்சி, தன் கைகளாலேயே ஆசையாக பூ வைத்து விடுகிறார். அலெக்ஸ் ஆத்வெய்ட்டும் மிகுந்த மகிழ்ச்சியோடு பூ வைத்துக்கொள்கிறார். இது குறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அலெக்ஸ் ஆத்வெய்ட், தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த நண்பர்கள் இவர்கள் என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

11 days ago

மேலும்