புதுடெல்லி: ஒன்பிளஸ் போன்கள் மூலமாக தனது காதல் துணையை அடையாளம் கண்டதாக நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தனது காதல் கதையை அவர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். அது இப்போது பரவலாக கவனம் பெற்றுள்ளது.
கற்பனையோ, எதார்த்தமோ இந்த உலகம் கடிதம் மூலம் காதல், பார்க்காமலே காதல், பேசாமலே காதல், கம்ப்யூட்டர் வழியே காதல், கைபேசி மூலம் காதல் என பல காதல் கதைகளை கடந்து வந்துள்ளது. ஆனால், இந்தக் கதை அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது.
“2014-ல் ஒன்பிளஸ் போனை வைத்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. அப்போது என்னைப் போலவே மற்றொருவரும் அந்த போனை வைத்திருப்பதை பார்த்தேன். ‘நாம் இருவரும் ஒரே மாடல் போனைதான் பயன்படுத்தி வருகிறோம்’ என சொல்லி என்னை அறிமுகம் செய்து கொண்டேன். இப்போது அவர் என் காதலி. இந்த 8 ஆண்டு காலமாக நாங்கள் இருவரும் காதலில் விழுந்துள்ளோம்” என Alpaca டெக் என்ற பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் பயனர் ஒருவர் இதனை பகிர்ந்துள்ளார்.
இந்த ட்வீட்டை ஒன்பிளஸ் நிறுவனரான பேட் லாவ் (Pete Lau) தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட்டுக்கு இதுவரை 1.86 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
» அங்கன்வாடி மையங்களுக்கு வணிக மின் கட்டண முறையை ரத்து செய்ய கோரி ஐசிடிஎஸ் மாநில செயற்குழு தீர்மானம்
» தொழில்நுட்ப சிக்கலால் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: மன்னிப்புக் கேட்ட ஐசிசி
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
19 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
28 days ago