மண் காப்போம் இயக்கத்துக்காக பிரான்ஸ் முதல் கோவை வரை சைக்கிளில் பயணித்த பெண்

By செய்திப்பிரிவு

கோவை: மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ், பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த ஊரான பிரான்சின் டூலோன் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக சைக்கிளில் பயணித்து, டிசம்பர் 1-ம் தேதி இந்தியா வந்தார். பின்னர் அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர், கோவை ஈஷா யோகா மையத்துக்கு நேற்று வருகை தந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE