சாத்தூர்: விருதுநகர் அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னவைரவன். இவரது மனைவி ரோகிணி. இவர்களுக்கு வைர லட்சுமி (7), சுகானா (4) என இரு மகள்கள் உள்ளனர்.
விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் வைர லட்சுமி 2-ம் வகுப்பும், சுகானா எல்.கே.ஜி.யும் படித்து வருகின்றனர். இவர்கள் ஒரு வருடமாக யோகா கற்று வருகின்றனர். இவர்கள் கடந்த 6 மாதங்களாக இருவரும் முட்டை மீது அமர்ந்து ஹனுமனாசனம், விபத்த பட்சி மோத்தாசனம் ஆகிய பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று சாத்தூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுகானா 120 முட்டைகள் மீது அமர்ந்து ஹனுமனாசனத்தை 30 நிமிடங்கள் செய்தார். வைர லட்சுமி 30 முட்டைகள் மீது அமர்ந்து இரு கைகளிலும் தண்ணீர் டம்ளரை பிடித்துக் கொண்டு விபத்த பட்சி மோத்தாசனத்தை 30 நிமிடங்கள் செய்தார்.
இவர்களது இந்த சாதனையை நோபிள் புக்-ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் பதிவு செய்தனர். மேலும் சாதனைக்கான சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
29 days ago