காசநோய் பாதிப்பால் ஏழ்மைக்குத் தள்ளப்படும் நோயாளிகள்: உதவித் தொகையை உயர்த்தி வழங்குமா அரசு?

By க.சக்திவேல்

கோவை: காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தேவை என்பது முக்கியம். ஏனெனில், மருந்து, மாத்திரைகள் சாப்பிடும்போது அதை தாங்கும் திறன் வேண்டும். மத்திய அரசின் 'நிக் ஷய் போஷன் யோஜனா' திட்டத்தின் மூலம் காசநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் சத்தான உணவு சாப்பிட, அவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக செலுத்தப்படுகிறது.

காசநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்தால், அவர் பணியாற்றும் நிறுவனங்கள் பெரும்பாலும் அவர்களை வேலையைவிட்டு நீக்கிவிடுகின்றனர். இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டு, அந்த குடும்பத்தினர் ஏழ்மைக்கு தள்ளப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை, மாத்திரை, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டாலும் நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று வரும் ஆகும் போக்குவரத்து செலவு, குடும்பத்தை நடத்த தேவையான மாத செலவுகளை சமாளிக்க முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சிகிச்சை பெறும் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் உதவித்தொகையை வழங்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த இடையர்பாளையத்தைச் சேர்ந்த ரவி (53) கூறும்போது, “4 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு காசநோய் இருப்பது தெரியவந்தது. முன்பு பெயின்டர் வேலை செய்து வந்தேன். எனக்கு காசநோய் பாதிப்பு இருக்கிறது என தெரிந்தபிறகு யாரும் வேலைக்கு அழைப்பதில்லை. உறவினர்கள் வீட்டுக்கு வருவதில்லை. பிள்ளைகளும் தொடர்பில் இல்லை. முன்பு நிறைய நண்பர்கள் இருந்தனர்.

தற்போது பேச்சுத் துணைக்குகூட யாரும் இல்லை. பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்பட்டுள்ளேன். இந்த 4 ஆண்டுகளாக வேலையில்லாமல் இருக்கிறேன். மருத்துவமனைக்கு சென்றுவரக் கூட சிரமப்படுகிறேன். மாதந்தோறும் அளிக்கப்படும் ரூ.500 வைத்துக்கொண்டு ஒருநாள் உணவு தேவையைக்கூட பூர்த்தி செய்ய இயலாது. எனவே, என்னைப்போன்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுயதொழில் தொடங்கவும், காசநோய் குணமாகும்வரை குறைந்தது ரூ.5 ஆயிரம் வழங்கினால்தான் செலவுகளை சமாளிக்க உதவியாக இருக்கும்”என்றார்.

இழந்த வேலையை பெறமுடிவதில்லை: கோவை சிறுமுகை, பெத்திக்குட்டையைச் சேர்ந்த பிரவீன்ராஜ் (32) கூறும்போது, “எனக்கு காசநோய் ஏற்படும் முன்பு மாதம் ரூ.20 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்தேன். காசநோய் ஏற்பட்ட பிறகு பணிக்கு செல்லவில்லை. நான் சென்ற பணிக்கு சென்ற இடத்தில் வேறு ஒருவரை பணியமர்த்திவிட்டனர். எனது மனைவியை தவிர, மற்ற அனைவரும் என்னை ஒதுக்கிவைத்துவிட்டனர். யாரும் உதவி செய்யவில்லை. தற்கொலைக்கு முயற்சி செய்தேன். மனைவிதான் நம்பிக்கை அளித்தார். அவர் பணிக்கு செல்லும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தோம்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த வேலையை மீண்டும் பெற முடிவதில்லை. எனவே, காசநோய் தொடர்பாக அரசு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மாதம்தோறும் ஊட்டசத்து பொருட்களை வாங்க அளிக்கப்படும் தொகையை உடனடியாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "மத்திய அரசு நோயாளிகளுக்கு மாதம் ரூ.500 வழங்குகிறது. இதுதவிர, மாநில அரசு சார்பில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. 6 மாதங்கள் இந்த தொகை வழங்கப்படுகிறது. ஆனால், நிறைய பேருக்கு அந்த அட்டை இருப்பதில்லை. மாதம் ரூ.500 என்பது போதுமானதில்லைதான். இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்