புத்தாண்டு தினத்தையொட்டி நள்ளிரவு முதல் மதுரையில் புத்தக காட்சி

By செய்திப்பிரிவு

மதுரை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவை வளர்க்கும் விதமாக மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில், கடந்த 29 ஆண்டுகளாக புத்தக காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

2023-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய புத்தக காட்சி விடிய, விடிய நடக்கிறது. 10 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. 200 தலைப்புகளில் அரசியல், பொருளாதாரம், தத்துவம், கலை, இலக்கியம், வாழ்வியல், வரலாறு உள்ளிட்ட புதிய புத்தகங்கள் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இறையன்புவின் நூல்கள், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், கம்பராமாயணம், மார்க்சிய செவ்வியல் நூல்கள், ரஷ்ய இலக்கிய நூல்கள், வீரம் விளைந்தது, நவீன கால இந்தியா, பண்டைக்கால இந்திரா, பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், எஸ்.வி.ராஜதுரை, அ.கா.பெருமாள், டாக்டர் கு.சிவராமன், ராகுல் சாங்கிருத்யாயன் ஆகியோரது நூல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுதவிர தமிழ் இலக்கிய நூல் வரிசைகளான பாவாணர், சாமி சிதம்பரனார், பாரதிதாசன், திரு.வி.க. போன்றோரின் நூல்களுக்கும் 40 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங் கப்படுகிறது. ரூ.1,500-க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு மேகதாசன் எழுதிய ‘நல்லதொரு வீணை செய்தே’ என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது என மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE