மதுரை: கல்வி மூலமே சமூக மாற்றம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையுடன் மதுரையில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கு முதல் நூலகம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் திருநங்கை பிரியா பிரபு.
மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்தவர் திருநங்கை, எழுத்தாளர், குறும்பட இயக்குநர் பிரியா பிரபு. இந்தியாவின் முதல் திருநங்கையர்/திருநம்பிகள் ஆய்வு மற்றும் ஆவண மையத்தை 2016-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். கல்வி மூலமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் திருநங்கைகள், திருநம்பிகளின் கல்வி மேம்பாட்டுக்காக நூலகமும் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து திருநங்கை பிரியா பிரபு கூறியதாவது: "திருநங்கை என்பதால் என்னால் பிளஸ் 2க்கு மேல் படிக்கமுடியவில்லை. அந்த நிலை மாற்றுப்பாலினத்தவர்களுக்கு வரக்கூடாது என்றும் அவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலும் இந்நூலகத்தை நடத்தி வருகிறேன். புத்தக வாசிப்பு மூலம் பலவற்றையும் கற்றுக்கொண்டேன். இதன்மூலம் சர்வதேச நிறுவனத்தின் திட்ட மேலாளராக இருந்துகொண்டே மாற்றுப்பாலினத்தவர்களுக்கு நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என நூலகம் நடத்தி வருகிறேன்.
நூலகத்தில் மாற்றுப்பாலினம் தொடர்பான 200க்கு மேலான புத்தகங்கள், குறும்படங்கள், 7000-க்கு மேலான செய்தித்தாள், பொது அறிவு புத்தகங்கள் உள்ளன. இது அனைத்து தரப்பினருக்கான நூலகம். கல்லூரி ஆராய்ச்சி மாணவர்கள் பலர் இங்கு வந்து படிக்கின்றனர். மேலும், ‘டிரான்ஸ் பப்ளிகேஷன்’ எனும் பதிப்பகம், ‘டிரான்ஸ் நியூஸ்’ எனும் இணைய செய்தி, "டிரான்ஸ் மீடியா" எனும் வலைத்தளம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
» 1986-ன் ரசீதை பகிர்ந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் பிரியர்: விலையைக் கண்டு அதிர்ந்த நெட்டிசன்கள்!
» பெங்களூரு தமிழ்ப் புத்தக திருவிழாவுக்கு வரவேற்பு: திருக்குறளைத் தேடி வாங்கிய வாசகர்கள்
பல கல்லூரிகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாற்றுப்பாலினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழக அரசின் திருநங்கைகள் நல வாரிய உறுப்பினராக இருந்து அரசு நலத்திட்டங்கள் கிடைக்க உதவி வருகிறேன். மேலும் தமிழகத்தில் வாழ்ந்த திருநங்கை பற்றி ‘அரிகண்டி’ எனும் திரைப்படத்தையும் இயக்கி வெளியிடவுள்ளேன். இதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை இயக்குநராகியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
16 hours ago
வாழ்வியல்
19 hours ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
27 days ago
வாழ்வியல்
27 days ago