கார் ஓட்டும் பெண்கள் கவனத்திற்கு 10 குறிப்புகள்
தற்போதுள்ள அவசர காலக்கட்டத்தில் வீட்டில் உள்ள ஆண், பெண் அனைவரும் வாகனங்களை ஓட்டுவது அவசியமாகிறது. முன்பெல்லாம் கார் போன்ற வாகனங்களை செலுத்தும் பெண்களின் எண்ணிக்கை அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்தன. ஆனால், இந்த எண்ணிக்கை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது நிச்சயம் ஆரோயக்கிமான மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வாகனம் ஓட்டும் பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
- பெண்கள் காரை இயக்க அமர்ந்தவுடன், தங்களுக்கு ஏற்றவாறு இருக்கையை சரி செய்து கொள்ள வேண்டும்.
- வாகனத்தின் பக்கவாட்டுப் பகுதி, பின் பகுதியை கார் ஓட்டும் போது கவனிக்க உதவும் கண்ணாடி (ரியர் வியூ மிரர்), பக்க வாட்டு கண்ணாடி (சைடு வியூ மிரர்) ஆகியவற்றை தங்களுக்கு வசதியாக சரி செய்து கொள்ளவேண்டும்.
- காரை இயக்குவதற்கு முன்பாக போதுமான அளவுக்கு எரிபொருள் (பெட்ரோல் அல்லது டீசல்) இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பின்பு கியரை நியூட்ரலில் வைத்து இன்ஜினை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
- இன்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன் முதல் கியரை போட்டு கிளட்ச் பெடலில் இருந்து மெதுவாக காலை எடுக்க வேண்டும். அதேசமயம் வலது கால் மூலமாக ஆக்சிலரேட்டர் கொடுக்க வேண்டும். இதன் மூலம் இன்ஜின் அடிக்கடி ஆஃப் ஆவதைத் தவிர்க்கலாம்.
- பொதுவாக கியரை போட்டுவிட்டு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுக்காமல் அல்லது அதன் மீது காலை வைத்தபடி ஓட்டுவார்கள். இதனால் கிளட்சின் செயல்பாடு விரைவில் குறைந்துபோகும். இதனால் கியரை மாற்றியவுடன் கிளட்ச் பெடலிலிருந்து காலை மெதுவாக எடுத்துவிட வேண்டும்.
- நெரிசல் மிகுந்த சாலைகளில் செல்லும்போது முன்னால் செல்லும் வாகனத்திற்கும் தங்கள் வாகனத்திற்கும் இடையே சுமார் 10 மீட்டர் இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
- பெண்கள் பெரும்பாலும் கார் ஓட்டும்போது குளிர் சாதனத்தை உபயோகிப்பார்கள். அப்படி உபயோகிக்கும்போது கேபினில் தேவையான அளவுக்கு குளிர் வந்தவுடன் ஏசி-யை ஆப் செய்துவிட்டு பிறகு குளிர் குறைந்தவுடன் ஆன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் எரிபொருள் சிக்கனமாகும்.
- சிலர் கார் ஓட்டும்போது வாகனத்தின் டேஷ் போர்டில் உள்ள கிளஸ்டரை கவனிக்க மாட்டார்கள். இது மிகவும் தவறு. கிளஸ்டரில் உள்ள ஸ்பீடா மீட்டர், டெம்ப்ரேச்சர் கேஜ், பியூயல் கேஜ் ஆகிய மூன்றையும் அடிக்கடி கவனித்து வாகனத்தை ஓட்டுவது நல்லது. இதனால் சில விபத்துகளைத் தடுக்க முடியும்.
- நான்கு முனை சிக்னலைக் கடக்கும்போது நாம் போக விரும்பும் திசையின் எதிர் திசையில் ஹஸார்ட் ஸ்விட்சை ஆன் செய்துவிட்டு சிக்னலைக் கடக்க வேண்டும்.
- மாலை நேரங்களில் வாகனம் ஓட்டும் பெண்கள், முகப்பு விளக்கு, வைபர் ஆகியவை சரியாக செயல்படுகிறதா என்று சரிபார்த்துக் கொள்வது பாதுகாப்பானது. ஏனென்றால் எலக்ட்ரிக்கல் பழுது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆகவே இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் பெண்கள் இதை கவனிக்க வேண்டும்.
- தாங்கள் இயக்கும் காரை சரிவர பராமரிக்க வேண்டும். போதுமான அளவு தூரம் ஓடிய உடன் சர்வீஸ் சென்டரில் கொடுக்க வேண்டும். ஆயில் மாற்றுவது, கூலன்ட் போன்றவை உரிய காலத்தில் மாற்ற வேண்டும். உரிய காலத்தில் சர்வீஸ் செய்வது வாகனத்தின் செயல்பாடுகள் நீடித்திருக்க உதவும்.
தகவல் உதவி: கே.ஸ்ரீனிவாசன்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்