10 ரூபாய் கொடுங்கள்.. - உறைய வைக்கும் குளிரில் புனித நீராடுகிறேன்: டெல்லி இளைஞரின் வீடியோ வைரல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘வெறும் 10 ரூபாய் கொடுங்கள்..உங்களுக்காக உறைய வைக்கும் குளிரிலும் புனித நீராடுகிறேன்’’ என இளைஞர் ஒருவர் கூறும் காட்சி சமூக இணையளத்தில் வைரலாகியுள்ளது.

டெல்லி உட்பட வடமாநிலங்கள் பலவற்றில் கடும் குளிர் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 5.8 டிகிரிக்கு சென்றுவிட்டது.

வடமாநிலங்களில் புனித தலங்களுக்கு சுற்றுலா செல்பவர், கடும் குளிர் காரணமாக புனித நீராட முடியாமல் தவிக்கின்றனர்.

இதை பார்த்த இளைஞர் ஒருவருக்கு புது யோசனை வந்தது. அவர்களுக்கு பதிலாக குளிர்ந்த நதியில் நீராடி, அதற்கு கட்டணமாக ஒரு சிறு தொகை வசூலிக்கலாம் என்பதுதான் அந்த யோசனை.

அவர் நதிக்கரையில் அமர்ந்தபடி, ‘‘சகோதர, சகோதரிகளே, உங்களுக்காக இந்த கடும் குளிரில் நாங்கள் புனித நீராடுகிறோம். வெறும் 10 ரூபாய் மட்டும் தாருங்கள். நதியில் புனித நீராடிய பலன் உங்களுக்கு கிடைக்கும்’’ என்கிறார்.

இந்த வீடியோவை ‘புதிய வேலைவாய்ப்பு’ என்ற பெயரில் ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோவை 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 1,600 பேர் ‘லைக்’ செய்துள்ளனர். 278 பேர் டிவிட்டரில் மீண்டும் பகிர்ந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்