ஒரு நாய்க்கு சிறுமிக்கும் இருக்கும் இணையில்லாத அன்பும் புரிதலும் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னை மறந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும் பள்ளிச் சிறுமியை 'அப்பா வருகிறார் டிவியை அணைத்துவிட்டு படி' என நாய் ஒன்று எச்சரிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் பழைய வீடியோவை Yoda4ever என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட, அது இப்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
சுமார் 25 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், வீடு ஒன்றின் வரவேற்பறையிலிருக்கும் சோபாவில் அமர்ந்த படி, பள்ளிச் சிறுமி ஒருவர் சீருடையுடன் டிவி பார்த்துக் கொண்டிக்கிறார். அவளின் எதிரே ஒரு ‘டீ பாய்’ இருக்கிறது. அதன்மேல் பாடப் புத்தகம் விரித்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து பெரிய திரை டிவி ஒன்று இருக்கிறது. டிவிக்கும் இடையில் தரையில் 28 என்ற எண் கொண்ட சட்டை அணிந்தபடி ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் ஒன்று படுத்திருக்கிறது.
அமைதியாக படுத்திருக்கும் நாய், ஏதோ ஒரு ஓசையை உணர்ந்து திடீரென எழுந்து இரண்டு முறை குரைத்தப்படி, டிவி பார்க்கும் சிறுமியை காலை வைத்து எச்சரிக்கை செய்கிறது. உடனடியாக பரபரப்பாகும் சிறுமி, டிவி அணைத்துவிட்டு வேக வேகமாக எதிரில் இருக்கும் டீ பாய் மேஜையில் அமர்ந்து எழுதத் தொடங்குகிறார். அவர் எழுதத் தொடங்குவதற்கும் குழந்தையின் அப்பா வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வருவதற்கும் சரியாக இருக்கிறது. டிவி பார்த்ததும் போதும் படி என எச்சரித்திருக்கிறது என்பதை பின்னர் தான் உணர முடிகிறது. அத்துடன் நிற்காமல் அந்த அப்பா அடுத்த அறையின் வாசலுக்குச் செல்லும் வரை அவரை பின்தொடர்ந்து சென்று திரும்புகிறது அந்த விசுவாசமான நண்பன்.
இந்த வீடியோவை பகிரிந்துள்ள பயனர் இதற்கு "பா(வ்)ர்ட்னர் இன் க்ரைம்" என்று தலைப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. டிச.18-ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த சுவாரஸ்யமான வீடியோ 6 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. 36 ஆயிரம் பேர் விரும்பியுள்ளனர். பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
» பறவையைத் துரத்தித் திரும்பிய வேகத்தில் அது நடந்தது... சிரிக்க வைக்கும் நாயின் சேட்டை!
» வாகனக் கழிவுகளைக் கொண்டு மிகப்பெரிய ருத்ர வீணை உருவாக்கிய ம.பி. கலைஞர்கள்
பயனர் ஒருவர், "அந்த நாய் சிறுமியை எச்சரிப்பதில் இருந்து அது அவளது சிறந்த தோழன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், உள்ளே வரும் மனிதர் எப்படி சிறுமியையும் நாயையும் கவனிக்காமல் செல்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் வீட்டிற்கு வரும் போது உங்கள் மகளுக்கு ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டீர்களா? மிகவும் சோகமான மனிதர்" என்று கூறியுள்ளார்
மற்றொரு பயனர், "துரதிர்ஷ்டவசமாக அந்த நல்ல மனிதருக்கு கேமரா இருப்பது தெரியவில்லை" என தெரிவித்துள்ளார். நாய்களுக்கு சிறு குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சி இருக்கிறது என்று மூன்றாவது பனரும், "ஜெர்மன் ஷெப்பர்டு நாய் உங்களை ஒருபோதும் கைவிடாது" என்று நான்வது பயனரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோ பதிவு > இங்கே
https://twitter.com/Yoda4ever/status/1604440086396825600?s=20&t=NvkwZQgg7jvRwsNuqVmIag
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
10 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
27 days ago
வாழ்வியல்
27 days ago