உலகக் கோப்பை கால்பந்து - வட சென்னையில் கோலாகலம்: இறுதிப் போட்டியை டிஜிட்டல் திரையில் கண்டுகளிக்க ரசிகர்கள் ஏற்பாடு

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில், வட சென்னையின் சிறப்பு கால்பந்து விளையாட்டு. மாநகரின் பல பகுதிகளில் கிரிக்கெட் மட்டைகளையும், பந்துகளையும் கையில் சுழற்றிக் கொண்டிருக்கும் போது, வட சென்னையில் மட்டும் கால்பந்தை விரட்டிச் சென்று உதைத்துக்கொண்டு இருப்பார்கள்.

மாநகரின் பிற பகுதிகளில் நண்பர்கள் கூடி தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என பேசிக்கொண்டிருக்கும்போது, வட சென்னையில் மரடோனா, மெஸ்ஸி, ரொனால்டோ பற்றிதான் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு வட சென்னையில் கால்பந்து பிரபலமடைந்துள்ளது.

இப்பகுதி சிறார்களுக்கு ரொனால்டோ, மெஸ்ஸி என்று பட்டப் பெயர்கள் வைத்து அழைக்கப்படுகிறது. காலை நேரங்களில் பெரும்பாலான விளையாட்டு திடல்களில் சிறார்கள் கால்பந்தாட்ட பயிற்சி பெறுவதை பார்க்கலாம்.

வட சென்னையில் குறிப்பாக வியாசர்பாடி முல்லைநகர் திடல், பக்தவத்சலம் காலனி திடல், கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் திடல், கன்னிகாபுரம் திடல், புளியந்தோப்பு திடல் ஆகியவை கால்பந்துக்கு புகழ்பெற்ற மைதானங்களாகும். இங்கு பயிற்சி பெற்ற பலர், பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று உயர்ந்துள்ளனர்.

வியாசர்பாடி பகுதியில் 65 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுதல் மாதா ஆலயம் கட்டப்பட்டது. அதன் அருட்தந்தைகளாக இருந்த மந்தோனி, ஸ்லூஸ் ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு உணவிட்டு, கால்பந்துவிளையாட்டை கற்றுக்கொடுத்தனர். அங்கு பலர் சென்னை துறைமுக தொழிலாளிகளாக இருந்தனர்.

அவர்களின் குழந்தைகளுக்கு விளையாட்டு பிரிவில் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதனால் கால்பந்து விளையாட்டு மீது வட சென்னை மக்களுக்கு பற்று ஏற்பட்டது. அப்போது தொடங்கிய கால்பந்து ஆர்வம், இன்றும் தொடர்கிறது. கத்தாரில் உலகக் கோப்பைகால்பந்து போட்டி தொடங்கியதில்இருந்து, சென்னையில் அதிக கால்பந்து ரசிகர்களைக் கொண்டுள்ள வட சென்னை விழாக் கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெற்ற லீக் மற்றும்காலிறுதி, அரையிறுதி போட்டிகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

இறுதிப் போட்டி பிரான்ஸ், அர்ஜென்டினா இடையே கத்தாரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் வென்று உலகக் கோப்பையை கைப்பற்றுவது யார் என்பதை அறிந்துகொள்வதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். இது தொடர்பாக வியாசர்பாடியில் சிறார்களுக்கு பல ஆண்டுகளாக கால்பந்து பயிற்சி அளித்துவரும் ‘குடிசைப்பகுதி குழந்தைகள் விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டு மையம்' தலைவர் தங்கராஜ் கூறியதாவது:

கால்பந்து விளையாட்டில் பிரகாசிக்க வேண்டுமென்றால் போராட்ட குணம், தைரியம், தன்னம்பிக்கை, உடல் பலம் அவசியம். இவை அனைத்தும் வட சென்னை மக்களிடம் இருந்ததால், கால்பந்து இன்றும் இங்கு உயிர்ப்புடன் இருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல்ஒவ்வொரு உலகக் கோப்பை இறுதி போட்டியையும் வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திடலில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறோம்.

5-வது முறையாக இன்றும் அகண்டடிஜிட்டல் திரையில் ஒளிபரப்ப இருக்கிறோம். மேலும் வியாசர்பாடி மேக்சின்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்ப ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்